![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கருப்பு மற்றும் தங்கநிற லெதர் ஜாக்கெட்.. ராதிகா ஆப்தேவின் வைரல் புகைப்படங்கள்!
ராதிகா ஆப்தே இன்ஸ்டாகிராமில் தனது கருப்பு மற்றும் தங்கநிற லெதர் ஜாக்கெட்டில் சில கவர்ச்சியான படங்களைப் பகிர்ந்தது வைரலாகி வருகிறது.
![கருப்பு மற்றும் தங்கநிற லெதர் ஜாக்கெட்.. ராதிகா ஆப்தேவின் வைரல் புகைப்படங்கள்! Radhika Apte's bold pictures in a leather jacket is taking the internet by storm கருப்பு மற்றும் தங்கநிற லெதர் ஜாக்கெட்.. ராதிகா ஆப்தேவின் வைரல் புகைப்படங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/22/729176957b41329d27ca7c5f746c0c14_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கருப்பு மற்றும் தங்கநிற லெதர் ஜாக்கெட் மற்றும் வெள்ளை உள்ளாடையில் போஸ் கொடுத்து ராதிகா கவர்ச்சியாக தோற்றமளிக்கிறார். லெதர் ஆடைகள் மற்றும் தங்க நெக்லெஸ் கூடுதல் அழகாக காட்டுவதாக கமென்டில் பலர் புகழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில், நடிகை ராதிகா ஆப்தே தனது 2015 ஆம் ஆண்டு திரைப்படமான 'பார்ச்செட்' திரைப்படத்தின் அந்தரங்க காட்சி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து சர்ச்சைக்கு உள்ளானார். பல பழமைவாத நெட்டிசன்கள், இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக் மூல்ம் ட்விட்டரில் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
க்ளீன் ஷேவனில் இருந்து வந்த நிர்வாண வீடியோ களிப்களுக்காக விமர்சிக்கப்பட்டதைப் பற்றியும் அவர் முன்னதாக பேசியிருந்தார். அந்த சமயத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாதபடி ட்ரோல் செய்யப்பட்டார். ஆழமாக பார்க்கக்கூடிய அறிவான கண்களுக்கு அது நான் இல்லாது என்று தெரியும் என்று விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்தார். இப்படி அடிக்கடி சர்ச்சைக்குரிய புகைப்படங்களில் சிக்கிக்கொள்வது ராதிகா ஆப்தேவிற்கு புதிதல்ல. #BoycottRadhikaApte ட்விட்டர் ட்ரெண்டிற்கு பதிலளித்த அடில் ஹுசைன் "ராதிகாவை 'பார்ச்செட்’ படத்தில் உள்ள காட்சிகளுக்காக ட்ரோல் செய்வது அபத்தமானது" என்று கூறியிருந்தார்.
இம்முறை இட்டுள்ள புகைப்படத்திற்கு நிறைய நல்ல கமெண்டுகள் வந்திருந்தாலும், அங்கும் சிலர் ட்ரோல் செய்யவே செய்கிறார்கள். இவையெதையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல், தான் விரும்பியதை செய்துகொண்டிருக்கும் ராதிகாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு.
View this post on Instagram
நெட்ப்லிக்ஸ் இந்தியாவில் வந்திறங்கியதிலிருந்து ராதிகா ஆப்தேவை வைத்து பல திரைப்படங்களும், ஆந்தாலஜிக்களும், வெப் சீரிஸ்களும் செய்து அவரது திறமைக்கு தீனிபோட்டுக்கொண்டுள்ளது. OTT தளங்களில் சென்சார் கோட்பாடுகள் இல்லாததால் படைப்பு சுதந்திரம் அதில் எக்கச்சக்கமாக இருந்தது ஆத்மார்த்தமாக திரைப்படம் இயக்குபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. அதற்கு ராதிகா போலொரு நடிகையும் கூடவே கிடைத்தது தங்கள் கலைப்படைப்பை வெளிக்கொணர எளிய வழிகளாய் அமைந்தது. அதை தொடர்ந்து ராதிகா தேர்ந்தெடுக்கும் கதாப்பாத்திரங்கள் வலுவாகவும் அமைந்தன. அதை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் அவரை இன்னும் வசை பாடி வருகின்றனர்.
இதற்கிடையில், ராதிகா கடைசியாக 'ராத் அகேலி ஹை' படத்தில் நவாசுதீன் சித்திக், ஸ்வேதா திரிபாதி, திக்மான்ஷு துலியா, ஷிவானி ரகுவன்ஷி, நிஷாந்த் தஹியா, ஞானேந்திர திரிபாதி, இல அருண், ஸ்வானந்த் கிர்கிரே, நிதேஷ் குமார் திவாரி மற்றும் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். ஒரு வயதான குடும்ப உறுப்பினரின் மரணம் குறித்து விசாரிக்க வரவழைக்கப்பட்ட ஒரு சிறிய நகர போலீஸ்காரரைச் சுற்றி நகர்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் அத்திரைப்படம்.
ராதிகா அடுத்து ‘மோனிகா, ஓ மை டார்லிங்’ படத்தில் நடிக்கிறார். இது ஒரு OTT இயங்குதளத்தில் வெளியிட தயாராக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)