Radha Ravi : செக்போஸ்ட் தாண்டி வந்த கம்முநாட்டி.. ரஜினியை கடுமையாக திட்டிய ராதாரவி
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் ராதாரவி தற்போது ரஜினிகாந்தை கடுமையாக திட்டியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ராதாரவி பல மேடைகளில் பலவிதமாக பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. எம்.ஆர்.ராதாவின் மகனாக இருப்பதால் என்னவோ மனதில் தோன்றியதே அப்படியே ராதாரவி பேசிவிடுகிறார். இதனால், அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் சரி சினிமாத்துறைக்கும் அவப்பெயரே மிஞ்சுகிறது. சர்ச்சையாகும் வகையில் பேசினாலும் அதுகுறித்து வருந்தியதாக தெரியவில்லை.
நயன்தாரா மீது விமர்சனம்
அண்மையில் நடிகை நயன்தாரா எல்லாம் சீதா வேடத்தில் நடிப்பது தான் சினிமாவின் கொடுமை என ஒரூ கூட்டத்தில் ராதாரவி பேசியிருந்தார். இந்த பேச்சு கடும் சர்ச்சையை சந்தித்தது. இதற்கு நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டு ராதாரவியின் பேச்சுக்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பின்னர், அவர் சார்ந்திருந்த கட்சியில் இருந்தும் நீக்கப்ப்டடார். இதைத்தொடர்ந்து பாடகி சின்மயி விவகாரம் பூதாகரமாக வெடித்தது. சின்மயி பாட தடை விதித்தது ராதாரவிதான் என பலரும் பேச தொடங்கிவிட்டனர். இதற்கான முழு காரணத்தையும் அவரே விளக்கம் அளித்துள்ளார்.
ராதாரவி விளக்கம்
சின்மயி பாட்டு பாட நான் தடை போட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அது உண்மை கிடையாது. நான் டப்பிங் யூனியனுக்கு தான் தலைவராக இருந்தேன். ஆனால் அவர் பாடுவதற்கு தடை விதித்தது மியூசிக் யூனியனிலிருந்து தான் என தெரிவித்தார். சமீபத்தில் சினிமா வாழ்க்கை குறித்து அளித்த பேட்டியின் போது இதனை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் இமான் இசையில் சின்மயி ஒரு பாடல் பாடியிருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், ராதாரவி நடிகர் ரஜினியை கடுமையாக தாக்கி பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி - ராதாரவி நட்பு
ரஜினி நடித்த பணக்காரன், உழைப்பாளி, ராஜாதி ராஜா, குரு சிஷ்யன் போன்ற பல படங்களில் ராதாரவி வில்லனாக நடித்திருக்கிறார். விஜயகாந்திற்கு உற்ற நண்பனாக இருந்தது போன்றே ஒரு காலத்தில் ரஜினிக்கும் நண்பனாக இருந்துள்ளார். இருவரும் ஒன்றாக மது அருந்தியது குறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன. கிடைத்த நேரங்களில் எல்லாம் ராதாரவியை அழைத்து பேசுவதை ரஜினி வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதுகுறித்து ராதாரவியே பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
செக்போஸ்ட் தாண்டிய கம்முனாட்டி
ராதாரவி முகத்திற்கு நேராக கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசக்கூடிய சுபாவம் உடையவர். சினிமாவில் இருப்பது போன்று அல்லாமல் ரஜினியிடம் வெளிப்படையாக எதையும் பேசக்கூடிய நபராக இருந்திருக்கிறார். குறிப்பாக அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரங்களில் ரஜினியை கடுமையாக விமர்சித்து ராதாரவி பேசியுள்ளார். அதேபோன்று ஒரு மேடையில் ராதாரவி பேசியிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், குரு சிஷ்யன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ரஜினிகாந்த் என்னிடம் ஏன் ரவி நான் ஒரு வேளை அரசியலுக்கு வந்தால், நீங்கள் எனக்கு ஆதரவாக பேசினால் என்ன பேசுவீர்கள் என கேட்டார். அதற்கு நான் செக்போஸ்ட் தாண்டி வந்த கம்முநாட்டி என திட்டுவேன் என அந்த ஸ்பாட்டிலேயே சொன்னேன். அது என்ன செக்போஸ்ட் தாண்டி வந்த? என ரஜினி கேட்டார். ஆமாம் நீங்க கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு செக் போஸ்ட் தாண்டிதான வந்தீங்க என கூறினேன் என பேசியதும் கலகலப்பாக மக்கள் சிரித்தார்கள் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குரு சிஷ்யன் படத்தில் நடிக்கும் போது நான் அரசியலுக்கு வந்தால் என்னை பாராட்டி என்ன பேசுவீங்கனு ராதரவியிடம் கேட்டிருக்கான் ரஜினி..
— Ganesh Sai (@iganeshsai) June 18, 2025
அதற்கு அவர் "செக் போஸ்ட் தாண்டி வந்த கம்முநாட்டி" என்று சொல்வேன் என்றார் ராதாரவி... pic.twitter.com/OdcfxmBQqq






















