மேலும் அறிய

Rachitha Mahalakshmi: “உண்மை கசக்க தான் செய்யும், உங்க வேலைய பாருங்க..” தினேஷ் விவகாரத்தில் ரச்சிதா பதிவு!

Rachitha Mahalakshmi: "உண்மை எப்போதுமே கசக்கும். அதற்காக அது உண்மை இல்லை என ஆகிவிடாது" - அட்வைஸ் கொடுப்பவர்களுக்கு இன்ஸ்டா போஸ்ட் மூலம் மீண்டும் பதிலடி கொடுத்த நடிகை ரச்சிதா.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்தவர்கள் நடிகர் ரச்சிதா மஹாலக்ஷ்மி மற்றும் தினேஷ் ஜோடி. ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடியானவர்கள். மிகவும் சந்தோஷமாக நகர்ந்த அவர்களின் திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். 

Rachitha Mahalakshmi: “உண்மை கசக்க தான் செய்யும், உங்க வேலைய பாருங்க..” தினேஷ் விவகாரத்தில் ரச்சிதா பதிவு!

தினேஷ் என்ட்ரி : 

கடந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவராகக் கலந்து கொண்ட ரச்சிதா வெகு சிறப்பாக விளையாடி 91 நாட்கள் வரை நீடித்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து சக போட்டியாளர்களுக்கு சரியான டஃப் கொடுத்து வருகிறார் தினேஷ்.   

ரச்சிதாவுக்கு ரசிகர்கள் அட்வைஸ்: 

தினேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நாள் முதல் பல இடங்களில் தான் ரச்சிதாவுடன் மீண்டும் இணைந்து வாழ விருப்படுவதாகவும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று அதை ரச்சிதாவுக்கு பரிசளிப்பேன் எனக் கூறியுள்ளார். ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரின் ரசிகர்களும் அவர்கள் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் எனவே ஆசைப்படுவதால் ரச்சிதாவுக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். 

ரச்சிதாவின் பதிலடி :

ஆனால் தினேஷ் மீது இருக்கும் கோபம் சற்றும் தணியாத ரச்சிதா அவ்வப்போது இன்ஸ்டாகிராம் மூலம் தகுந்த பதிலடியை கொடுத்து வருகிறார். அந்த வகையில் யார் வேண்டுமானாலும் அட்வைஸ் கொடுக்கலாம் ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்கு தான் வலி என்ன என்பது தெரியும். என்னுடைய வாழ்க்கையை பார்த்து கொள்ள எனக்கு தெரியும். அதனால் தயவு செய்து யாரும் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம் என பளிச் பதில் அளித்துவிட்டார். மேலும் பிக் பாஸ் வீட்டில் தினேஷுக்கு எதிராக சண்டையிடும் விசித்திராவுக்கு, ரச்சிதா தன்னுடைய ஆதரவை சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து இருந்தார். 

Rachitha Mahalakshmi: “உண்மை கசக்க தான் செய்யும், உங்க வேலைய பாருங்க..” தினேஷ் விவகாரத்தில் ரச்சிதா பதிவு!
விசித்திராவை கண்டித்த கமல் : 

கடந்த வாரம் விசித்திரா கேமரா முன் நின்று தினேஷ் பற்றியும் அவரின் பர்சனல் லைஃப் பற்றியும் விமர்சனம் செய்து இருந்தார். அவரின் அந்த செயல்பாடுக்கு சனிக்கிழமை எபிசோடில் கண்டனம் தெரிவித்து இருந்தார் நடிகர் கமல்ஹாசன். ஒரு கணவன் மனைவி இடையே நாட்டாமை செய்ய வேறு ஒருவருக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என சரியான பதிலடி கொடுத்தார். 
ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் விசித்திராவால் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. தினேஷ் வேண்டுமானாலும் ஒரு நல்ல அண்ணன், தம்பி, மகனாக இருக்கலாம் ஆனால் ஒரு நல்ல கணவனாக நிச்சயமாக இருக்க முடியாது என அவர் பேசியதற்கு பலரும் விமர்சனங்களை தெரிவித்து  வருகிறார்கள். 

ரச்சிதா லேட்டஸ்ட் போஸ்ட் : 

அந்த வகையில் ரச்சிதா தன்னுடைய லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்டில் "உண்மை எப்போதுமே கசக்கும். அதற்காக அது உண்மை இல்லை என ஆகிவிடாது. மற்றவர்கள் ஜட்ஜ் பண்ணலாம், ஆனால் என்னுடைய வாழ்க்கையை வாழ முடியாது. என்னுடைய இந்த வாழ்க்கை போரில் நானே தனியாக போராடி கொள்கிறேன். எல்லாரும் உங்களுடைய வேலையை பாருங்க. நாங்க எங்க வேலையை பார்த்துக்கொள்கிறோம் " எனப் பகிர்ந்துள்ளார். 

மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "துரதிர்ஷ்டவசமான ஒன்று என்னவென்றால் நாம் வாழும் இந்த உலகில் ஒருவரின் செயல்கள் கேள்வி கேட்கப்படுவதில்லை.  ஆனால் அந்த செயலுக்கான ரியாக்ஷன் தான் எப்போதும் விமர்சிக்கப்படுவடுகிறது. என்ன ஒரு பரிதாபம்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரச்சிதாவின் இந்தப் பதிவு விசித்திராவின் அட்வைஸூக்கு கொடுத்த பதிலா அல்லது கமல்ஹாசன் சொன்ன கருத்திற்கான பதிலா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget