Rachita | முதல் இரவுல நீங்க என்ன செஞ்சீங்க.. பத்திரிக்கையாளரை அலறவைத்த நடிகை..
'முதல் இரவு’குறித்து கன்னட நடிகை ரசிதா ராம் பேசியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
கன்னடத்தில் டிம்பிள் குயின் என்றழைக்கப்படும் நடிகை ரசிதா ராம். இவர் கன்னடத்தில் ‘ஐ லவ் யூ’, ‘ராணா’, ‘ஜக்கு தாதா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது 'லவ் யூ ரச்சு' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரசிதா ராம் தான் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பேசினார்.
அப்போது படத்தில் ரசிதா நடித்த நெருக்கமான காட்சிகள் குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு பதிலளித்த நடிகை, அந்த பத்திரிக்கையாளரை நோக்கி “நீங்கள் உங்கள் முதல் இரவில் என்ன செய்தீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பேசிய அவர், “இங்கு திருமணம் ஆனவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எனக்கு யாரையும் சங்கடப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை.நான் பொதுவாகவே கேட்கிறேன்.. கல்யாணத்திற்கு பிறகு மக்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் காதல் செய்வார்கள் இல்லையா, அதுதான் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்க்கும்போது நான் ஏன் இந்தக் காட்சிகளில் நடித்தேன் என்பது உங்களுக்கு தெரியும்” என்றார்.
இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தேஜஸ்வி நாகலிங்கசாமி, ரச்சிதாவின் கருத்து மாநிலத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் மாநிலத்தின் புகழை கலங்கம் விளைவித்து விட்டதாகவும் சாடினார்.
கன்னட கிராந்தி தளமும் ‘முதல் இரவு" குறித்து சர்ச்சை கருத்துக்கு நடிகை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது மட்டுமல்லாமல் நடிகைக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிடம் கோரிக்கை வைத்து உள்ளது.
மேலும் படிக்க:
`ஆர்.ஆர்.ஆர்’ வெளியீடும், அலியா பட்டின் கெத்தான `கங்குபாய் கதியாவாடியும், நன்றி தெரிவித்த ராஜமெளலி.. ஏன்?#GangubhaiKathiawadi #RRR #AliaBhatt #Rajamoulihttps://t.co/i17IK0Emet
— ABP Nadu (@abpnadu) November 16, 2021