Puneeth Rajkumar: புனீத் ராஜ்குமாருக்கு கன்னட ரத்னா விருது அறிவிப்பு
முதன்முதலில் கன்னட ரத்னா விருது புனீத் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மறைந்த கன்னட திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கன்னட ரத்னா விருது வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மறைவுக்கு பிறகு புனீத் ராஜ்குமாருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
மாநிலத்தின் உயரிய விருதைப் பெறும் 10வது நபர் புனீத் ராஜ்குமார் ஆவார். இந்த விருது கடைசியாக கடந்த 2009ஆம் அம்மாநிலத்தைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்கடேவுக்கு வழங்கப்பட்டது. முதன்முதலில் கன்னட ரத்னா விருது புனீத் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
State Government has decided to honour late Puneeth Rajkumar (in file photo) with Karnataka Ratna award posthumously: Karnataka Chief Minister Basavaraj Bommai pic.twitter.com/IHvcI4wux9
— ANI (@ANI) November 16, 2021
புனீத் ராஜ்குமாரின் உன்னத படைப்புகளை அங்கீகரித்து அவருக்கு பசவ புரஸ்காரத விருதுடன் கர்நாடக ரத்னா என்ற பட்டத்தையும் வழங்குமாறு ரசிகர்கள் கர்நாடக முதலமைச்சருக்கு சிறப்பு கடிதம் எழுதியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் உயரிய சிவிலியன் கெளவுரவமான கர்நாடக ரத்னா, எந்தவொரு துறையிலும் அவரது அசாதாரண பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது.
கன்னட சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான புனீத் ராஜ்குமார், நடிகரும் கன்னட ஐகானுமான டாக்டர் ராஜ்குமாரின் கடைசி மகன் ஆவார். அவர் மாரடைப்பு காரணமாக அக்டோபர் 29ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவரது மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் முதல் அனைத்து துறைகளின் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இதற்கிடையில், புனீத் மரணத்திற்குப் பின் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அவரது ரசிகர்களைத் தவிர, கர்நாடக அரசின் தற்போதைய இரண்டு அமைச்சர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு கொண்டு செல்லுமாறு முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் அமைச்சர்கள் பி.சி.பாட்டீல், ஆனந்த் சிங் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
கொரோனா நிவாரண நிதியாக புனீத் ராஜ்குமார் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நன்கொடை அளித்திருந்தார். அதற்கு முன், வட கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சரின் இயற்கை பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கினார். அவர் இறந்த பிறகு தனது கண்களை தானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்