மேலும் அறிய

HBD Puneeth Rajkumar : எளிமையான குணம்... கள்ளம் கபடமற்ற சிரிப்பு... ரசிகர்களின் நெஞ்சங்களை விட்டு நீங்காத புனீத் ராஜ்குமார்!   

நமக்கு மத்தியில் இன்று இல்லாமல் இருந்தாலும் நினைவுகளால் அனைவரையும் அன்பால் கட்டிபோட்ட புனீத் ராஜ்குமாரின் 48வது பிறந்தநாள் இன்று

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என கொண்டாடப்பட்ட நடிகர் புனீத் ராஜ்குமாரின் 48-வது பிறந்தநாள் இன்று. வீட்டின் கடைக்குட்டியாக பிறந்த புனீத் ராஜ்குமாரின் இறப்பு அவரது குடும்பத்தை மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகம் மற்றும் திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அவரின் பிறந்தநாளான இன்று அவரின் நினைவலைகள் ரசிகர்களின் மனங்களை கணக்கவைக்கிறது.

புனீத் ராஜ்குமார்
புனீத் ராஜ்குமார்

சத்தமில்லாமல் செய்த சேவை :

ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே தனது பயணத்தை தொடங்கிய புனீத் ராஜ்குமார் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் ஹீரோவாக அறிமுகமானது 2002ம் ஆண்டு வெளியான 'அப்பு' திரைப்படத்தில். ஒரு சிறந்த நடிகர் என்று கொண்டாடப்படும் புனீத் ராஜ்குமார் உண்மையிலேயே இரு புனிதமான ஆத்மா. எத்தனையோ ஏழை குழந்தைகளின் கல்வி செலவு, ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மற்றும் கோசாலை என ஏராளமான சமூக சேவைகளை சத்தமில்லாமல் செய்துள்ளார் என்பது அவரின் மறைவுக்கு பிறகு தான் வெளிவந்துள்ளது. நான் இது செய்தேன் அது செய்தேன் என மார்தட்டிக்கொள்ளும் எத்தனையோ மனிதர்கள் மத்தியில் இப்படி ஒரு மனிதனா? என அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தவர் புனீத் ராஜ்குமார். 

புனீத் ராஜ்குமார் நினைவிடம் :

இது போன்ற நல்ல குணம் படைத்த நல்லவர்களை எல்லாம்தான் கடவுள் தேர்ந்து எடுத்து தன்னுடன் சேர்த்துக்கொள்கிறான் என்ற கோபமும் வந்துபோகிறது. அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக அவரின் இறுதி சடங்கில் லட்சக்கணக்கான எளிய மக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்றும் அவரின் நினைவிடத்தில் மக்கள் கூட்டத்தால் தினந்தோறும் நிரம்பி வழிகிறது. அவர் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' திரைப்படம் அவரின் இறப்புக்கு பின்னரே வெளியானது. அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இன்று அவர் நமக்கு மத்தியில் இல்லை என்றாலும் அவரின் நினைவுகளும், கள்ளம் கபடமற்ற சிரிப்பும் மக்கள் நெஞ்சங்களில் இன்றும் என்றும் மலர்ந்துகொண்டேதான் இருக்கும்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்

Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?

sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?

Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்

Embed widget