ஹவுஸ் ஃபுல்... டிக்கெட் வாங்க அலைமோதிய கூட்டம்... ஊர் தலைவர் படத்தை திருவிழா போல கொண்டாடிய மக்கள்
தாரை, தப்பட்டை அடித்து, பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து திரையரங்கே திருவிழா போல காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் படத்தை பார்ப்பதற்கு கிராம மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சி தலைவராக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வேங்கை அய்யனார் பணியாற்றி வருகிறார். அரசியல் மட்டுமல்லாமல் திரை துறையிலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பில் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வெற்றி அடைந்த வெட்டு திரைப்படம் தமிழில் தயாரிக்கப்பட்டது.
இந்த திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியான நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திரையரங்கில் இந்த திரைப்படம் வெளியானது. இதனை காண்பதற்காக மல்லூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரையரங்கிற்கு வந்தனர். தலைவரின் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக கிராம மக்கள் திருவிழா போல குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்றனர். தாரை, தப்பட்டை அடித்து, பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து திரையரங்கே திருவிழா போல காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் படத்தை பார்ப்பதற்கு கிராம மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. ஒரு கட்டத்தில் படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்க கிராம மக்களின் கூட்டம் அலைமோதியது.
பின்னர், திரையரங்கத்திற்கு வந்த தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் மற்றும் நடிகர் விஜயுடன் போக்கிரி படத்தில் நண்பராக வந்த கராத்தே ராஜா உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, கிராம மக்கள் வேங்கை அய்யனார் மற்றும் கராத்தே ராஜாவிற்கு மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் வரவேற்றவர்.
திரைப்படம் தயாரித்து நடிப்பது தனது நீண்ட நாள் கனவு. அது இன்று நிறைவேறி உள்ளது. வெட்டு திரைப்படம் தாய் மகனின் பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது மதுரையில் நடந்த உண்மை சம்பவம். அறிமுகப் படங்களுக்கு மக்கள் வரவேற்பு தர வேண்டும். பெரிய ஹீரோக்கள் படங்களை விட தற்போது அறிமுக நடிகர்களின் படங்களுக்கு மக்கள் ஆதரவு தந்து வருகின்றனர். வெட்டு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடையும் என வெட்டு படத்தை தயாரித்து நடித்த வேங்கை அய்யனார் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

