லைகாவின் மாஸ்டர் பிளான் ஆரம்பம்... ஹைப்பை ஏற்படுத்தும் ஐடியா... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா PS2 ?
லைகா புரொடக்சன்ஸ் மிகவும் மும்மரமாக இணையத்தில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளை செய்து வருகிறது. அதன் ஆரம்பமாக டைனி கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது
லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியான இப்படம் உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா, ஜெயராம் என மிக பெரிய திரை பட்டாளமே ஒன்று திரண்டு நடித்த இப்படத்தின் மெய் மயக்கும் பாடல்களுக்கு இசையமைத்து இருந்தார் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
டைனி கிளிம்ப்ஸ் வீடியோ :
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை மையமாக கொண்டு வெளியான இப்படம் இரண்டு பாகங்களாக உருவானதில் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதோடு 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வெளியாக தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்பமாக நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயராம் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் நடந்த அனுபவம் குறித்து பேசும் டைனி வீடியோ ஒன்று கிளிம்ப்ஸ் வீடியோவாக சோசியல் மீடியாவில் நேற்று வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது.
லைகாவின் ஸ்டேடர்ஜி
லைகா புரொடக்சன்ஸ் மிகவும் மும்மரமாக இணையத்தில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளை செய்து வருகிறது. மக்கள் மத்தியில் படத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற அருமையான மார்க்கெட்டிங் ஸ்டேடர்ஜியை கையில் எடுத்துள்ளது. முதல் பாகத்திற்கு இதே போன்ற தொடர்ச்சியான புரோமோஷன் பணிகளால் மக்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. படம் குறித்தும் படப்பிடிப்பு குறித்தும் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மேற்கொண்ட புரோமோஷன் பணிகள் அனைத்தும் பொன்னியின் செல்வன் 1 படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய பங்கு வகித்தன என்றால் அது மிகையல்ல. இதே ஸ்டேடர்ஜியை இரண்டாம் பாகத்திற்கும் முன்வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது லைகா புரொடக்சன்ஸ்.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா PS2 ?
பொன்னியின் செல்வன் பார்ட் 1 கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யுமா என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். இதற்கான விடையை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.