Thalapathy 66 updates: 20 வருஷம் ஆச்சு... விஜய் சொன்ன சீக்ரெட்... தளபதி 66 குறித்து தில் ராஜூ ஓபன் டாக்..!
விஜய் 66 படத்தின் குறித்து அப்படத்தயாரிப்பாளர் டில் ராஜூ பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருப்பதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, விஜயின் 66 ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.
அதன் படி, நடிகர் விஜய் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும், தில் ராஜூ தயாரிப்பில், தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிக்க இருப்பது தெரிய வந்தது. இந்தப்படம் விஜய் 66 படம் பைலிங்குவலாக, அதாவது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.
விஜய் 66 , செண்டிமெண்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட உள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் வம்சி “படத்தில் மனித உறவுகள் மற்றும் , உணர்ச்சிகள் இரண்டிற்கும் இடமளித்து கதையை உருவாக்கியுள்ளேன். மேலும் விஜய் சாரின் ரசிகர்கள் மற்றும் அவரின் ஸ்டார் வேல்யூவையும் மனதில் வைத்துதான் கதை எழுதியிருக்கிறேன் “ என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ பேசியிருக்கிறார்.
Producer #DilRaju about #Thalapathy66 film in a recent chat session!
— #Thalapathy66 (@Vijay66OfficiaI) January 23, 2022
Shooting begins from March. Vijay said that this was the best ever script narrated to him in 20 years. The film will hit the screens in Diwali or Sankranthi. #Vijay66 #దళపతి66 @actorvijay @SVC_official pic.twitter.com/DpVACqnqhn
அவர் கூறும் போது, “ 20 வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையை கேட்டிருக்கிறேன் என நடிகர் விஜய் என்னிடம் கூறினார். தளபதி 66 படம் மார்ச் மாதம் தொடங்கும். தீபாவளி அல்லது பொங்களுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார். இந்தத் தகவலால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.