கனடாவில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட ப்ரியங்கா தேஷ்பாண்டே!
Vijay Tv Priyanka : ப்ரியங்காவின் கிண்டல் பேச்சும் மற்றவர்களிடம் அவரின் வேடிக்கையான அணுகுமுறையும் அவரின் ஸ்பெஷாலிட்டி.
Priyanka Deshpande: நடு ரோட்ல குஷியா ஆட்டம் போட்ட விஜய் டிவி பிரபலம்...யாருனு பாருங்க
சமீபத்தில் ரோட்டில் செம்ம ஆட்டம் போட்டுள்ளார் விஜய் டிவியின் செல்ல குட்டி. யாருனு எல்லாருக்கும் ஒரே ஆர்வமா இருக்குமே. ஆமாங்க நாம் பிரியங்கா தேஷ்பாண்டே தான் அது. சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களுக்கும் மிகவும் பிடித்த தொகுப்பாளர் பிரியங்கா என்பதில் எந்த சந்தேகமுமில்லை. தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர்.
நெஞ்சங்களை அள்ளும் கில்லாடி :
ஒரு சாதாரண தொகுப்பாளரா அறிமுகமான பிரியங்கா இன்றைக்கு சின்ன குழந்தையில இருந்து வயதானவர்கள் வரை அனைவரின் ஃபேவரைட் ஆங்கர். பிரியங்காவின் கிண்டல் பேச்சும் மற்றவர்களிடம் அவரின் வேடிக்கையான அணுகுமுறையும் அவரின் ஸ்பெஷாலிட்டி. அவரின் காமெடி, மகிழ்ச்சியான ஆங்கரிங் என அனைத்தையும் ரசிக்கும் ரசிகர்கள், பிரியங்கா என்ன செய்தாலும் ரசிப்பார்கள்.
View this post on Instagram
செம்ம டான்ஸ் போங்க:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று ரன்னர் அப் ஆக வந்தவர். சமீபத்தில் கனடா ட்ரிப் சென்றுள்ள பிரியங்கா அங்கே நடு ரோட்டில் தீடீரென ஒரு டான்ஸ் ஆடிய விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுதான் ரசிகர்கள் பிரியங்கா எதை செய்தாலும் ரசிப்பார்களே அப்படி இருக்கும் போது அவரின் இந்த டான்ஸ் வீடியோவை ரசிக்காமல் இருப்பார்களா. பிரியங்காவின் டான்ஸ் வீடியோவிற்கு லைக்ஸ்களும், கமெண்ட்களும் புயல் வேகத்தில் அதிகரித்து வருகின்றன.
View this post on Instagram
என் தொகுப்பாளர்? போட்டியாளர் ஆகலாமே :
பிரியங்கா காமெடியல தான் ஸ்டராங்னு பார்த்த டான்ஸும் பிச்சு உதறாங்களே. தற்போது பிரியங்கா பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 எனும் விஜய் டிவியின் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கிறார். ஒரு வேலை டான்ஸ் ஷோவில் ஆங்கரா இருந்ததால டான்சர் ஆகிட்டாங்களோ பிரியங்கா. அவங்க ஏன் ஒரு போட்டியாளரா பிக் பாஸ் ஜோடிகள் போட்டியில கலந்துக்க கூடாது என அவரின் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இத்தனை நாளா இவ்ளோ திறமைகளை எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்க அம்மணி...