pathuthala update |விறுவிறுப்பாக நடக்கும்' பத்து தல 'படப்பிடிப்பு! - ஷூட்டிங் ஸ்பாட்டில் நாயகி வெளியிட்ட புகைப்படம்!
சிம்பு நடிப்பபில் அறிவிக்கப்பட்ட ஒரு படம் ஷூட்டிங் வரையிலாவது செல்லுமா , அப்படியே எடுத்து முடிக்கப்பட்டாலும் எப்போதுதான் ரிலீஸுக்கு வரும் என்ற ஊசல் அவரது ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே உண்டு.
டைம் லூப் என்னும் சையின்ஸ் ஃபிக்ஸன் கதையுடன் அரசியலையும் இணைத்து உருவாக்கியிருக்கும் திரைப்படம்தான் மாநாடு. சிம்பு நடித்திருக்கும் இந்த படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி ரேஸில் பல முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளதால் படத்தை நவம்பர் 25 ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி செய்தி வெளியிட்டார். சிம்பு என்னதான் மாற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கினாலும் , அவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உண்டான பழைய பிரச்சனைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. இது ஒரு புறம் இருக்க அவரின் நடிப்பில் ஒரு படத்தின் பெயரை அறிவித்தால் அந்த படம் ஷூட்டிங் வரையிலாவது செல்லுமா , அப்படியே எடுத்து முடிக்கப்பட்டாலும் அது திரையரங்கிற்காவது வருமா என்ற ஊசல் அவரது ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே உண்டு. அந்த வகையில் நிறைய படங்கள் அறிவிக்கப்பட்டு முடங்கி போன வரலாறும் ஒன்று.
✈️ Off to #Mumbai for the next schedule of #VTK 👍🏻 pic.twitter.com/IUsjO0yHLM
— Silambarasan TR (@SilambarasanTR_) October 17, 2021
அப்படித்தான் பத்து தல படமும் இழுபறியில் இருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் படத்தை எடுப்பதில் விடாப்பிடியாக இருந்ததால் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கன்னடத்தின் வெளியான முப்தி படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஓபேலி கிருஷ்ணா இயக்குகிறார். கௌதம் கார்த்திக் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் சிம்புவுடன் நடித்து வருகின்றனர். பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. கௌதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்புகளை முடித்த கையோடு சிம்பு , பத்து தல படத்தில் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
We have been shooting in Kanyakumari for a week now for #pathuthala and I’m glad we did🤗 Confluence of 3 seas, it’s one of the most beautiful towns i have been to. The people, the weather, the food and the serenity of this town will always have my heart ❤️ until next time 🙌🏼 pic.twitter.com/HMA90IN7Ju
— Priya BhavaniShankar (@priya_Bshankar) October 30, 2021
இந்நிலையில் படத்தின் நாயகி பிரியா பவானி சங்கர் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் “ஒரு வாரமாக கன்னியாகுமரியில் பத்துதல படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளோம், 3 கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் படப்பிடிப்பு நடந்தது மகிழ்ச்சி. நான் சென்ற மிக அழகான நகரங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள மக்கள், வானிலை, உணவு மற்றும் அமைதி போன்றவை அடுத்த முறை நான் வரும் வரையில் என் இதயத்தில் இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பிரியா பவானி சங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே திரைப்படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் நாயகனாக ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.