Good Bad Ugly: குட் பேட் அக்லி அஜித்துடன் இணையும் பிரேமலு ஹீரோ நஸ்லென்.. தமிழ், மலையாள ரசிகர்கள் ஹேப்பி!
Good Bad Ugly - Naslen: அஜித் குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தில் பிரேமலு படத்தின் நடிகர் நஸ்லென் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லி
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் படம் குட் பேட் அக்லி. அஜித் குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். கடந்த மே 10ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கியது. ஹைதராபாத் தொடர்ந்து அடுத்தக் கட்டமாக ரஷ்யாவில் குட் பேட் அக்லி படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப் பட இருக்கின்றன. குட் பேட் அக்லி படக்குழுவைப் பற்றி முக்கிமான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அஜித் உடன் இணையும் பிரேமலு பட நடிகர் நஸ்லென்
Confirmed: #Goodbadugle "Naslen" On Board 👍
— Movie Tamil (@MovieTamil4) May 31, 2024
- #Premalu fame #Naslen has been signed to act in GBU starring "Ajith".♨️
- His character will also be an important one.✔️
- Telugu actor #Sunil is playing the Important role in this film👑#Ajithkumar #Nayanthara #Sreeleela… pic.twitter.com/ARvtenrEhr
குட் பேட் அக்லி படத்தில் மலையாள நடிகர் நஸ்லென் (Naslen) இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் சூப்பர் சரண்யா, தண்ணீர் மதன் தினங்கள் உள்ளிட்டப் படங்களில் நடித்த நஸ்லென் சமீபத்தில் வெளியான பிரேமலு படத்தின் மூலம் தென் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படத்தில் நாயகியாக நடித்த மமிதா பைஜூ தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பரவலாக கவனமீர்த்து இரு மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது பிரேமலு படத்தின் நாயகனும் அஜித் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாக இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. இது குறித்த அதிகாரப் பூர்வமான தகவல் விரைவில் படக்குழு சார்பாக வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
விடாமுயற்சி
குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் இடைப்பட்ட காலத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பைத் தொடர இருக்கிறார் நடிகர் அஜித். அஜர்பைஜானில் படமாக்கப்பட்ட விடாமுயற்சி படம் ஒரு சில காரணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள படப்பிடிப்பு முடிந்த இந்த ஆண்டிற்குள்ளாக முடிந்து விடாமுயற்சி படம் வெளியாகும் என படக்குழு உறுதியளித்துள்ளது.
மேலும் படிக்க : AL Azhagappan: சம்பாதித்த பணத்தை எல்லாம் மகனை நடிகராக்க இழந்த தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்!