Tomato Meme Prakash Raj | நீ இப்போ சப்பையாயிட்ட டீ... பிரகாஷ் ராஜ் போட்ட ட்வீட்.. புரண்டு சிரிக்கவைத்த தக்காளி மீம் உள்ளே..
அதே போல தக்காளி விலை உயர்வு தொடர்பான சுவாரஸ்ய மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தற்போது தடைப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தக்காளிக்கு மவு அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை விடவும் தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் தக்காளி விலை உயர்வு தொடர்பான பதிவுகளை பகிந்து வருகின்றனர். அதே போல தக்காளி விலை உயர்வு தொடர்பான சுவாரஸ்ய மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சிங்கம் படத்தில் சூர்யா மற்றும் பிரகாஷ் ராஜ் இருவருக்குமான காட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட தக்காளி மீம் புகைப்படம் ட்விட்டரில் வைரலானது. அதில் சூர்யாவை பெட்ரோல் விலையாகவும் , பிரகாஷ் ராஜை தக்காளி விலையாகவும் சித்தரித்த கிரியேட்டர் . பிரகாஷ் ராஜ் அதாவது தக்காளி பெட்ரோல் விலையை பார்த்து ‘நீ சப்ப ஆயிட்ட டி ‘ என கூறுவது போல உருவாக்கியுள்ளார். இதனை ரசித்த பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து “இதை யார் செய்தது...சும்மாத்தான் கேட்டேன்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Who did this …#justasking pic.twitter.com/Oq86O7sWNg
— Prakash Raj (@prakashraaj) November 25, 2021
தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம் ,தெலுங்கு , கன்னடம் , இந்தி உள்ளிட்ட பன்மொழி திரைப்படங்களில் அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இந்தியாவின் முக்கிய மொழி திரைப்படங்களில் வில்லன் மற்றும் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ் நடிப்பு மட்டுமல்லாது அரசியல் ஆர்வமும் கொண்டவர்.அவ்வபோது இவர் பேசும் கருத்துகள் அரங்க முக்கியத்துவம் பெற்றதாகவும் அமைந்திருக்கிறது.தற்போது சிறிய vocal chords பிரச்சனையில் இருக்கும் பிரகாஷ் ராஜ் விரைவில் குணமாக வேண்டும் என அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் 5 முறை தேசிய விருது பெற்ற நடிகர் . அவற்றுள் ஒன்று சிறந்த தயாரிப்பாளருக்கான விருது. படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார்.கிட்டத்தட்ட 7 மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.
இறுதியாக தமிழில் இவர் நடித்த ஜெய் பீம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். படத்தில் தமிழ் தெரிந்தும் இந்தியில் பேசும் குற்றவாளி ஒருவரை கண்ணத்தில் அறைவது போன்ற காட்சிகளில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்ததால் , அவருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ் நான் படம் குறித்த புரிதல் வேண்டும் . படத்தில் பழங்குடியின மக்களின் அவதியை விட அறைதான் பெரிதாக தெரிகிறதா என கேள்வி எழுப்பியிருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.