வெங்கட் பிரபுவிடம் ஹர்பஜன் வைத்த கோரிக்கை; 28 ஆண்டுகளுக்கு பின் இணையும் அரவிந்த்சாமி-பிரபுதேவா!
இது ஒரு புறம் இருக்க கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஹர்பஜன் சிங் மங்காத்தா படம் குறித்து வெங்கட் பிரபுவிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்
ராஜிவ் மேனன் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மின்சார கனவு’. இந்த படத்தில் பிரபு தேவா, அரவிந்த் சாமி, காஜோல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். முக்கோண காதல் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் பாடல்கள் மற்றும் சில வசனங்கள் இன்றளவும் பிரபலம். பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமி இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் வகையில் , ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருப்பார்கள். கிட்டத்த 28 வருடங்கள் கழித்து பிரபுதேவா மற்றும் அரவிந்த்சாமி கூட்டணி மீண்டும் இணைய உள்ளனர். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில்தான் இவர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
வெங்கட் பிரபு தற்போது சிம்புவை வைத்து மாநாடு படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. படத்தை வருகிற ஆயுத பூஜை அன்று திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இது ஒரு புறம் இருக்க கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஹர்பஜன் சிங் மங்காத்தா படம் குறித்து வெங்கட் பிரபுவிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ட்விட்டரில் இயக்குநர் வெங்கட் ஹர்பஜன் சிங் நடித்துள்ள ஃபிரண்ட்ஷிப் படத்தின் டிரைலரை ஷேர் செய்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த ஹர்பஜன் சிங் “வெங்கட் ஜி ரொம்ப நன்றி !! மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க” என குறிப்பிட்டுள்ளார். அதற்கு கீழே ரசிகர்கள் “ ஹர்பஜன் ஜி நீங்க தலய நேர்ல பார்த்தா அவரோட எடுத்த ஃபோட்டா அப்லோட் பண்ணுங்க “ என அன்புக்கட்டளை விடுத்துள்ளனர்.
வெங்கட் @vp_offl ஜி ரொம்ப நன்றி !! மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க https://t.co/OljLM0HRj8
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 6, 2021
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், சதீஸ், லாஸ்லியா,ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்க உருவாகியுள்ள படம் 'ஃப்ரெண்ட்ஷிப்'. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டது. படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு படத்தின் வரிக்காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறகு லாஸ்லியா அறிமுகமாகும் முதல் படம் இது. அதே போல கிரிக்கெட் வீரர் ஹர்பஜ சிங்கிற்கும் இது முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.