RadheShyam Date | பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராதே ஷ்யாம்.. ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!
பிரபாஸ் நடித்து வெளிவர இருக்கும் ராதே ஷ்யாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டு உள்ளது படக்குழு. மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து வெளியாக இருக்கும் ராதே ஷியாம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஜனவரி 14-ஆம் தேதி படம் வெளியிடப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்த மாதம் ஜூலை 30-ஆம் தேதி படம் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக படம் வெளியிட தாமதமானது.
தயாரிப்பாளர்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பட வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர் . புது ஆண்டு , புது தொடக்கம் , திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது " ராதே ஷியாம் " என்று பதிவிட்டு இருந்தனர் .
New Year. New Beginnings. And a New Release Date! 🌟💕#RadheShyam all set to release in a theatres near you on Makar Sankranti, 14th January 2022
— UV Creations (@UV_Creations) July 30, 2021
Starring #Prabhas & @hegdepooja pic.twitter.com/FyhaF5kD8W
படத்தின் நாயகன் பிரபாஸும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "உங்கள் அனைவரையும் சந்திக்க எனது காதல் கதையுடன் ஜனவரி 14 அன்று வருகிறேன்" என்று பதிவிட்டு இருந்தார் .
View this post on Instagram
ராதா கிருஷ்ணா குமார் இயக்கி, யு.வி கிரியேஷன்ஸ் தயாரித்து வெளிவர இருக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம் . இந்த திரைப்படம் தொடக்கத்தில் இருந்தே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது . முதல் போஸ்டர் ரிலீஸ் தொடங்கி இன்று வரையிலும் ரசிகர் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாவே இருந்து வருகிறது . இன்று படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட பிறகு இணையத்தில் மிக வைரலாக ட்ரெண்ட் ஆகி வருகிறது " ராதே ஷ்யாம்" பிரபாஸ் உடன் இணைந்து பூஜா ஹெக்டே படத்தின் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே . முழுக்க முழுக்க காதல் கதையாக இருக்க கூடுமா அல்லது மசாலா நிறைந்த படமாக இருக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது . சச்சின் கெடேகர், பிரியதர்ஷி புலிகொண்டா, பாக்யஸ்ரீ, முர்லி சர்மா, குணால் ராய் கபூர், ரித்தி குமார், சாஷா சேத்ரி மற்றும் சத்யான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி-சீரிஸ் படத்தை வழங்குகிறது . தென்னிந்திய மொழிகளுக்கான இசையமைப்பை ஜஸ்டின் பிரபாகரன் கையாளுகிறார் மற்றும் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இது இந்தியில் மட்டுமல்ல, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளியிடப்பட உள்ளது .
மகேஷ் பாபுவின் சர்காரு வரி பாட்டா மற்றும் பவன் கல்யாண்-ராணா டகுபதி படமும் சங்கராந்தி சீசனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த பொங்கல் மற்றும் சங்கராந்தி தியேட்டர்களில் அனல் தெறிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது .