மேலும் அறிய

என்னை உலக சினிமா நோக்கி இழுத்துச் சென்றதே பாகுபலி தான்.. பிரபாஸ் நெகிழ்ச்சி

பாகுபலி எவ்வளவு பிரம்மாண்டமோ அதே அளவு பிரம்மாண்டம் அதில் நடித்த பிரபாஸுடனும் ஒட்டிக் கொண்டது.  ஓட்டு மொத்த இந்திய சினிமாவினைத் திரும்பிப்பார்க்க வைத்த பாகுபலி படம்.

பாகுபலி எவ்வளவு பிரம்மாண்டமோ அதே அளவு பிரம்மாண்டம் அதில் நடித்த பிரபாஸுடனும் ஒட்டிக் கொண்டது.  ஓட்டு மொத்த இந்திய சினிமாவினைத் திரும்பிப்பார்க்க வைத்த பாகுபலி படம்.

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியினைக்கண்டது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியான நிலையில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாத இப்படத்தில், ரம்யாகிருஷ்ணன், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தது. இவர்களது தனித்துவத்துவமான நடிப்பில் மிகப்பெரிய வெற்றியினைக்கண்ட பாகுபலி 3 ஆம் பாகம் வெப் தொடராக வெளியாகவிருக்கிறது. Bahubali before the beginning என்ற பெயரில் இத்திரைப்படம் வெப் தொடராக வெளிவரவுள்ளது. மேலும் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தின்  இளம் வயது வாழ்க்கையினை மையமாக வைத்து இத்தொடர் எடுக்கப்படவுள்ளது.  பாகுபலி முதல் பாகத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இத்தகைய பெருமையைப் பெற்று வைத்துள்ள பாகுபலியின் நாயகனான பிரபாஸ் இப்போதெல்லாம் தான் நடிக்கும் படங்கள் அனைத்தையுமே மல்டி லிங்குவலாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். தன்னை ஒரு பான் இந்தியா நட்சத்திரமாகவே அவர் தரம் உயர்த்திக் கொண்டு வருகிறார். மேலும், தன்னை உலக சினிமா நோக்கி இழுத்துச் சென்ற பெருமை முழுக்க பாகுபலிக்கே சேரும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் அவர் அளித்தப் பேட்டியில், என் சினிமா வாழ்க்கையின் கேம் சேஞ்சிங் ப்ராஜக்ட் என்றால் அது எப்போதுமே பாகுபலி தான். அது எனக்கு ஒரு மகிழ்ச்சி தரும் ப்ராஜக்ட். நான் எங்கு சென்றாலும் என்னை ரசிகர்கள் பாகுபலியாகத் தான் பார்க்கின்றனர். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைக்கும் எல்லாமே பாகுபலியால் தான் கிடைக்கிறது. நான் இன்னும் வளர்ந்தாலும் அதற்கும் பாகுபலி தான் காரணமாக இருக்கும் என்றார்.

என்னை உலக சினிமா நோக்கி இழுத்துச் சென்றதே பாகுபலி தான்.. பிரபாஸ் நெகிழ்ச்சி

கலவையான விமர்சனம் பெற்ற ராதே ஷ்யாம்:

ராதா கிருஷ்ணா குமார் இயக்கிய காதல் கதை ராதே ஷ்யாம். இந்தப் படத்தில் பிரபாஸ் கைரேகை நிபுணர் விக்ரமாதித்யாவாகவும், பூஜா ஹெக்டே டாக்டர் பிரேரனாவாகவும் நடித்துள்ளனர். ராதே ஷ்யாம் திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தயாரிப்பில் இருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் இறுதியாக கடந்த மார்ச் 11ஆம் தேதி  திரைக்கு வந்தது. திரையரங்குகளில் குவிந்த பிரபாஸின் ரசிகர்கள், இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு வெளியே கட்-அவுட்கள் அமைத்து அந்த தினத்தை கொண்டாடினார்கள். ஆனால் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இந்தப் படத்தை அடுத்து பிரபாஸ் கையில் ஆதிபுருஷ் என்ற புராண படம், ஸ்ருதி ஹாசனுடன் ஜோடி கட்டும் சலார், ப்ராஜக்ட் கே, ஸ்பிரிட் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Embed widget