Por Thozhil: கண்டண்ட் தான் ராஜா... நிரூபித்த போர் தொழில்...2-வது வீக் எண்டிலும் வசூல் வேட்டை!
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள போர் தொழில் திரைப்படம், கண்டெண்ட் தான் ராஜா என்பதை நிரூபித்து, நடிகர் அசோக் செல்வனின் திரைப் பயணத்தில் அதிக வசூலைக் குவித்த படமாகவும் உருவெடுத்துள்ளது.
ஹை பட்ஜெட், நட்சத்திர நடிகர்கள் தொடங்கி சிறு பட்ஜெட் படம் வரை வாராவாரம் சோர்வடைய வைக்கும் திரைப்படங்களைப் பார்த்து நொந்து கொண்டிருந்த கோலிவுட் ரசிகர்களின் கவலையைப் போக்கி சர்ப்ரைஸ் ஹிட் அடித்துள்ளது ‘போர் தொழில்’
எப்ரியஸ் ஸ்டுடியோ, E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘போர் தொழில்’. கடந்த மே 9ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.
இந்நிலையில், வெளியான முதல் நாள் முதலே போர் தொழில் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளத் தொடங்கியது. மேலும் தமிழ் சினிமாவின் ஆல்டைம் சிறந்த க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக போர் தொழில் உருவெடுத்துள்ளதாக கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.
பெரிய ப்ரொமோஷன்கள் இன்றி, சுமார் ஆறு கோடி செலவில் அளவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், ஐந்து நாள்களிலேயே 10 கோடி வசூலைத் தொட்டது. இந்நிலையில், முதல் வாரத்தைக் கடந்து, இரண்டாவது வார இறுதியிலும் மக்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இப்படம் வரவேற்பைப் பெற்று பெருநகர திரையரங்கங்களில் ஓடி வருகிறது. திரையரங்களில் உச்சபட்ச வரவேற்பு காரணமாக கூடுதல் காட்சிகளை திரையரங்குகள் சேர்த்துள்ளன.
மேலும் கேரளாவிலும் போர் தொழில் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்து வருகிறது. கேரளாவில் 9 நாள்களில் போர் தொழில் திரைப்படம் 2 கோடிகளை வசூலித்துள்ளது. மேலும், நடிகர் அசோக் செல்வனின் திரைப் பயணத்தில் அதிக வசூலைக் குவித்த படமாகவும் போர் தொழில் உருவெடுத்துள்ளது.
இந்த வாரம் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் கோடிகளில் வசூலித்தாலும் தமிழ்நாட்டில் வரவேற்பின்றி திரையரங்குகள் காத்து வாங்கி வருகின்றன. மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை படம் சுமாரான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வார இறுதியிலும் போர் தொழில் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மேலும் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கும் பாராட்டுகள் குவிந்த வருகின்றன.
முன்னதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் sacnilk தளம் வெளியிட்ட தரவுகளின்படி, போர் தொழில் திரைப்படம் இந்தியா முழுவதும் 18 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளது.
Por Thozhil Day 10 Afternoon Occupancy: 58.79% (Tamil) (2D)
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) June 18, 2023
#PorThozhil
https://t.co/bBvRxBjocP
இந்நிலையில், பெரும் பட்ஜெட், ப்ரொமோஷன் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு படத்தின் கண்டெண்ட் தான் முக்கியம், அது நன்றாக இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பளித்து வெற்றியடைய வைப்பார்கள் என்பதை போர் தொழில் திரைப்படம் நிரூபித்துள்ளதாக நெட்டிசன்கள் பகிர்ந்து படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர்.