மேலும் அறிய
Advertisement
‛நான் வரும் காட்சிகள் சொற்பமே...’ குதிரை சவாரி போட்டோ வெளியிட்டு அறிவித்த பார்த்திபன்!
PonniyinSelvan: ‛சோழ தேசம் நோக்கி….பொ.செ-வில் நான் வரும் காட்சிகள் சொற்பமே. என் பாத்திரத்தின் பெயரிலேயே ’சின்ன’உள்ளது’ -பார்த்திபன்!
இன்னும் இரு நாட்களில் வெளியாக இருக்கிறது பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கிய படங்களில் அதிக ப்ரமோஷன் செய்யப்படும் படம், பொன்னியின் செல்வன். காரணம், படம் மீதுள்ள எதிர்பார்ப்பு. அனைவருக்கும் அறிந்த கதை தான்; ஆனாலும், அதை மீறிய எதிர்பார்ப்பு. இப்போதே படத்தின் கதாபாத்திரங்களின் ஆடைகளை வைத்து மீம்ஸ் போடவும், விமர்சனம் செய்யவும் தொடங்கிவிட்டனர்.
பொன்னியின் செல்வன் வெளியானால், அடுத்த 10 நாட்களுக்கு அதைப்பற்றிய ‛டாக்’ தான் சுற்றி வரப்போகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி என இளம் ஹீரோக்கள் ஒருபக்கம், சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஜெயராம் என நெஞ்சில் நிற்கும் சீனியர்கள் மறுக்கம். போதாக்குறைக்கு த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா என அழகு பதுமைகள் நிறைந்த இத்திரைப்படத்தை, ‛பான் இந்தியா’ மூவியாக வெளியிடுவதால், ஒவ்வொரு மாநிலத்திலும் பொன்னியின் செல்வன் எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது.
சோழர்களின் பெருமையை இந்தியாவே கொண்டாடப் போகிறது என்று கூற சொல்லலாம். ஏற்கனவே ஆடியோ ஹிட் அடித்த நிலையில்,படத்தின் முதல் பாகம் வெளிவரப்போகிறது. இதற்கான உச்சபட்ச ப்ரமோஷன் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அதில் நடித்தவர்கள் தங்களால் முடிந்த உதவியை படக்குழுவிற்கு செய்து வருகின்றனர்.
View this post on Instagram
அந்த வகையில் நடிகர் பார்த்திபன், தனது சார்பில் , தனது பாணியில் சில ப்ரமோஷன்களை செய்துள்ளார். நேற்று வீடியோ வெளியிட்ட அவர், இன்று தன்னுடைய பாணியில் டெக்ஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
‛‛சோழ தேசம் நோக்கி….
பொ.செ-வில் நான் வரும் காட்சிகள் சொற்பமே.
என் பாத்திரத்தின் பெயரிலேயே’சின்ன’உள்ளது.
எனவே ….
எதிர்பார்ப்பே இல்லாமல் ஒரு சரித்திர பதிவு, மாபெறும் முயற்சி,வெற்றி பெற என்னால் இயன்ற
Promotional குதிரை சவாரி.
Let’s celebrate PS-1’’
என்று அந்த பதிவில் கூறியுள்ளார் பார்த்திபன். இரவின் நிழல் வெளியான போது, பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் பிஸியாக இருந்த பார்த்திபன், தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு அடுத்தடுத்து ப்ரமோஷன் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion