Ponniyin Selvan Update | குந்தவை கதாபாத்திரத்திற்கு சொந்தக் குரலில் டப்பிங்... புகைப்படம் வெளியிட்ட திரிஷா
மணிரத்னம் இயக்கும் முதல் சரித்திர திரைப்படம் என்பதாலும், மிகப்பெரிய பொருட்செலவில், பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் திரைப்படம் என்பதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கான படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. மத்திய பிரதேச மாநிலம் ஓர்ச்சா மற்றும் ஊட்டியில் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் நடைபெற்றன. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. மணிரத்னம் இயக்கும் முதல் சரித்திர திரைப்படம் என்பதாலும், மிகப்பெரிய பொருட்செலவில், பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் திரைப்படம் என்பதாலும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என தெரிகிறது. 'சம்மர் 2022’ என குறிப்பிடப்பட்டுள்ளதால், தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
PS-1 coming soon! #ManiRatnam #PonniyinSelvan #PS1@LycaProductions @MadrasTalkies_ pic.twitter.com/Tcydh4EvXx
— Trish (@trishtrashers) September 18, 2021
இந்நிலையில் தற்போது போஸ்ட் புரொடொக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவியும், அவரது சகோதரி குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடிக்கிறார்கள். கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுந்தர சோழராக, பிரகாஷ் ராஜ் நடிக்க, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கார்த்தி, வந்தியத்தேவனாக, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து வருகிறார்.
இதேபோல் குந்தவையாக, த்ரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.
குந்தவை காதாபாத்திரத்திற்கு திரிஷா சொந்தக் குரலில் டப்பிங் செய்கிறார். இந்நிலையில் தான் டப்பிங் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘டியர் செந்தமிழ்... பெருமூச்சு...’ என பதிவிட்டுள்ளார். திரிஷாவின் கொஞ்சும் தமிழில் குந்தவை கதாபாத்திரம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து திரையில் பார்க்கலாம்.
Mikka Nandri Kamsa Raja 😉🗡 https://t.co/AcypBEUx3Q
— Trish (@trishtrashers) September 16, 2021