Ponniyin Selvan: செப்டம்பர் முதல் வாரம் வரை வெயிட் பண்ணுங்க...ஏ.ஆர்.ரஹ்மான் எதை சொல்கிறார்?
ஆதித்த கரிகாலன் போரில் வெற்றி அடைந்ததை கொண்டாடும் வகையில் நேற்றைய தினம் சோழா சோழா பாடல் வெளியானது.
பொன்னியில் செல்வன் படத்தின் அடுத்தப் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அப்டேட் கொடுத்துள்ளார்.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். கடந்த ஜூலை 8 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவும், கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது.கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பொன்னி நதி பாடல் பாடலின் மேக்கிங், ஐமேக்ஸ் திரை வடிவில் படம் வெளியாகவுள்ள தகவல், 2 ஆம் பாடலான சோழா சோழா பாடல் கிளிம்ப்ஸ் வீடியோ என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதற்கிடையில் ஆதித்த கரிகாலன் போரில் வெற்றி அடைந்ததை கொண்டாடும் வகையில் நேற்றைய தினம் சோழா சோழா பாடல் வெளியானது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
Wait till September 1st week😊 https://t.co/axYzLdwwDf
— A.R.Rahman (@arrahman) August 20, 2022
இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஐடியை குறிப்பிட்டு பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்ரேயா கோஷல் பாடிய பாட்டை சீக்கிரமாக வெளியிடுங்கள். என்னால் அந்த தலைசிறந்த படைப்புக்காக காத்திருக்க முடியாது என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் அந்த பாடலை கேட்க செப்டம்பர் முதல் வாரம் வரை காத்திருங்கள் என தெரிவித்துள்ளார். இதுவே பொன்னியின் செல்வனின் 3 ஆம் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.