Ponniyin Selvan : பொன்னியின் செல்வன் கதையை ஆண்ட இரண்டு பெண் கதாபாத்திரங்கள்....!
பொன்னியின் செல்வனில் முக்கியமான இருவர் நந்தினி மற்றும் குந்தவை. கதைக்கு மிக முக்கிய மையப் புள்ளியாக திகழ்பவர்களும் இவர்கள்தான்!
மணிரத்னம் இயக்கத்தில் இன்று திரையரங்குகளிள் பெரும் எதிர்பார்போடு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன், இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த கதையை ஆண்ட இரண்டு பெண்களை பற்றி இங்கு பார்போம்....!
View this post on Instagram
பொன்னியின் செல்வன் கதைப்படி பார்த்தால் பெண்கள் அனைவருமே ஒரு முக்கிய பங்கு வகுத்திருப்பார்கள், அதில் முக்கியமான இருவர் நந்தினி மற்றும் குந்தவை. கதைக்கு மிக முக்கிய மையப் புள்ளியாக திகழ்பவர்களும் இவர்கள்தான், இருவருமே தங்களது குலத்தை பாதுகாக்க அறிவு கூர்மையால் போட்டியிடுவதும் மக்களை அசர வைக்கும்.
குந்தவை :
"செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்தவள் இளைய பிராட்டி குந்தவை ”
சுந்தர சோழனின் மகள் ஆதித்த கரிகாலனின் தங்கை மற்றும் பொன்னியின் செல்வனின் அக்கா குந்தவை. அறிவு மற்றும் ஆற்றலில் சிறந்து விளங்குபவள். சோழகுலம் தோற்றுவிடக்கூடாது என்றும் பாண்டிய குலத்தை வேரறுத்து விட வேண்டும் என்றும் சோழ நாட்டு இளவரசியான நந்தினி போடும் சூழ்ச்சி திட்டம் அனைத்தையும் முறியடிப்பவள் இளைய பிராட்டி குந்தவை.
திரைப்படத்தில் குந்தவை பிராட்டியாக வரும் திரிஷா தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். அதுவும் வந்தியதேவனை முதன்முதலாக சந்திக்கும் காட்சியில் இருவரின் உரையாடலின் போது வரும் வசனங்கள் ஒரு மெல்லிய காதலை வெளிப்படுத்துகிறது, என்னதான் வந்தியத்தேவன் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் வசீகரமாக பேசினாலும் குந்தவையிடம் உரையாடும் அந்த காட்சி மிகவும் தனித்திருந்தது.
சோழநாடே பெரும் அபாயத்தில் இருக்கும் நிலையில் தன் அறிவாற்றலால் ஒரு சிறிய செயலின் மூலமாக அவ்வளவு பெரிய முயற்சியை தோற்கடித்து விடுவாள் குந்தவை; அங்கு அவளுக்கு நாட்டின் மீது இருக்கும் பற்று எவ்வளவு ஆழமானது , அவளது அறிவுக்கூர்மை அனைவரின் முயற்சியையும் தோற்கடிக்கும் விதமாக இருக்கிறது என்பதை காட்சிப்படுத்தி இருப்பார்கள். அந்த காட்சியில் திரிஷாவின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.
நந்தினி :
பாண்டிய நாட்டை சேர்ந்தவள் நந்தினி. பாண்டிய நாட்டு அரசனான வீரபாண்டியனை கொன்றதற்காக சோழ வம்சத்தை அழிக்க திட்டமிடும் பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்யும் கதாபாத்திரம். சிறுவயதிலே கரிகாலனும் நந்தினியும் காதலித்து வருகின்றனர். பின்னர் குந்தவை செய்த சதிச் செயலால் நந்தினி வேற இடத்திற்கு சென்று விடுகிறாள். பல ஆண்டுகள் கழித்து நந்தினியை சந்திக்கும் கரிகாலனுக்கு அவள் பாண்டிய நாட்டை சேர்ந்தவர் என்று தெறிய வருகிறது. அந்தக் கோபத்தினால் அங்கு அடைக்கலத்தில் இருக்கும் வீரபாண்டியனை கொன்று விடுகிறான் கரிகாலன். இதனால் சோழ வம்சத்தை அளிக்க வேண்டும் என்று அவள் கண்ணில் தீரா பகையோடு பல சதி செயல்களை செய்து வருகிறார் நந்தினி.
குந்தவைக்கு இணையான அறிவையும் ஆற்றலையும் கொண்டவள் நந்தினி ,அழகுக்கு பேர் போனவளாக போற்றப்படுகிறார் நந்தினி. இந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் மிகவும் அற்புதமாக பொருந்தி இருக்கிறார் அழகுக்கு பேர் போன நந்தினி கதாபாத்திரத்தில் நமது கண்களை கொள்ளை கொள்கிறார் ஐஸ்வர்யா ராய்.
ஐஸ்வர்யா ராயை பார்க்கும் பொழுது அவளுள் இருக்கும் அத்தனை வலியும் நம்மால் உணர முடியும். காதல் கை கிடைக்காத வலி, தனது நாட்டு மன்னரை தன் கண் முன்னால் இழந்த வலி, இப்படி எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கண்ணில் கர்வம் நடையில் நளினம் தன் அழகால் அனைவரையும் வசிகரிக்கிறாள் நந்தினி. குமரன் முதல் கிழவன் வரை அவளுடைய சொல்லுக்கு பின் சொல் பேசாமல் அதன்படி நடக்கின்றனர்.
அறிவுக்கூர்மையில் மேலோங்கி நிற்கும் இரண்டு பெண்களுக்கு இடையிலான போட்டியில் யார் யாரை வெல்கிறார் என்பதைதான் சோழ குலம் வெல்கிறதா, பாண்டிய குலம் வெல்கிறதா என்பதே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் தான் தெரிந்து கொள்ள முடியும்.