Ponniyin Selvan: டிஜிட்டல் உரிமை 125 கோடி... பொன்னியின் செல்வன் படத்தை தட்டித் தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!
வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை 125 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
'பொன்னியின் செல்வன்' பட டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளம் 125 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
மணிரத்னத்தின் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு ரிலீசுக்குத் தயாராக உள்ளது.
View this post on Instagram
முன்னதாக நடைபெற்ற படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட் மற்றும் இந்திய சினிமாவின் பெரும் நட்சத்திரங்கள் சங்கமித்து கொண்டாடித் தீர்த்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முன்னதாக படத்தின் ஓடிடி உரிமையை 125 கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
View this post on Instagram
மேலும், அமேசான் இதுவரை வாங்கிய தமிழ் படங்களிலேயே இதுதான் ஹை பட்ஜெட் படம் என்றும் கூறப்படுகிறது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.