PS 1 Audio Launch: இது மன்னர் குதிரையில்லை.. செஸ் ஒலிம்பியாட் குதிரை! பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் தம்பி சிலை!
பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கின்றனர்.
பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Also Read : Ponniyin Selvan Audio Launch LIVE: ரெடியாகிய பொன்னியின் செல்வன் மேடை.. வருகை தரும் பிரபலங்கள்!
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி நடைபெற்றது.
The stage is set for the trailer launch of #PonniyinSelvan1
— Botha. Sridhar కారీౖ (@sridhar_botha) September 6, 2022
Vanthiyathevan @Karthi_Offl🗡️💥#PonniyinSelvan #PS1 #PS1Trailer #PonniyinSelvan1trailer #Karthi #PonniyinSelvantrailer #Vikram #AishwaryaRai #KamalHaasan #Rajinikanth pic.twitter.com/tqlkTHz0Cp
இதனைத் தொடர்ந்து படத்தின் 2 பாடல்கள் வெளியானது. அதன்பின் படத்தில் இடம் பெறும் கேரக்டர்களை லைகா நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கின்றனர். முன்னதாக தமிழில் நடிகர் கமல்ஹாசன், இந்தியில் அனில் கபூர், தெலுங்கில் ராணா டகுபதி, கன்னடத்தில் ஜெயந்த் கைகினி, மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் ஆகியோர் படத்திற்கான முன்னுரை குறித்த உரையை பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
#PonniyinSelvan GRAND AUDIO & TRAILER LAUNCH Day 👑💥#ChiyaanVikram #Karthi #JayamRavi #Trisha #ARRahman #ManiRatnam #AishwaryaRaiBachchan pic.twitter.com/cxhe3OIV2O
— VCD (@VCDtweets) September 6, 2022
இதற்கிடையில் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. குறிப்பாக விழா நடைபெறும் இடத்தின் மேடை, சுற்றியுள்ள இடங்கள் அரண்மனை செட்டப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
மேலும் வாசலில் செஸ் ஒலிம்பியாட் குதிரை ஒன்று வந்தவர்களை கைக்கூப்பி வணக்கம் தெரிவிக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக வைக்கப்பட்ட அந்த சிலை அகற்றப்படாமல் இருந்துள்ளதே இந்த குழப்பத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.