Garba Song: பாடலாசிரியராக அவதாரம் எடுக்கும் பிரதமர் மோடி - இணையத்தில் டிரெண்டாகும் பாடல்
கர்பா பாடல் குறித்து பேசியுள்ள பாடகி த்வனி பனுஷாலி, பிரதமர் மோடியுடன் இணைந்து மீண்டும் ஒரு பாடல் அமைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Garba Song: நவராத்திரி விழாவுக்காக பிரதமர் மோடி எழுதிய கர்பா பாடல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கொலு வைத்து பூஜிக்கபடும் நவராத்திரி விழா வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பிரதமர் மோடி எழுதிய கர்பா பாடல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி எழுதியுள்ள கர்பா பாடல் என்ற மாதி என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. 190 விநாடிகள் ஓடக்கூடிய கர்பா பாடல் இசையுடன் கூடிய நடனத்துடன் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி எழுதிய பாடலின் வரிகளுக்கு பாடகி த்வனி பனுஷாலி பாடியுள்ளார், அவரின் குரலுக்கு ஏற்ற இசையை தனிஷ்க் பாக்சி அமைத்துள்ளார். வண்ணமயமான காட்சிகளுடன் ரசிக்கும் விதமாக உள்ள கர்பா பாடல் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துரைத்துள்ளது.
இந்த நிலையில் கர்பா பாடல் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தற்போது வெளியாகி இருக்கும் படல் தனக்கு பல நினைவுகளை தருவதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ள பாடல் தான் தற்போது வெளியாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கர்பா பாடலை எழுதி இருப்பதாகவும், அதை நவராத்திரி விழாவில் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கர்பா பாடலுக்காக பாடகி த்வனி பனுஷாலி மற்றும் இசையமைப்பாளர் பாக்சிக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
As the auspicious Navratri dawns upon us, I am delighted to share a Garba penned by me during the past week. Let the festive rhythms embrace everyone!
— Narendra Modi (@narendramodi) October 15, 2023
I thank @MeetBros, Divya Kumar for giving voice and music to this Garba.https://t.co/WqnlUFJTXm
கர்பா பாடலுக்காக பிரதமர் மோடியுடன் பணியாற்றியுள்ள பாடலின் தயாரிப்பாளர் பேசும்போது, பிரதமருடன் இணைந்து கர்பா பாடலுக்காக பணியாற்றியது தனக்கு பெருமை என்றும், அனைவருக்கும் பிடிக்கும் விதமாக பாடல் இருப்பதாகவும் கூறியுள்ளார். கர்பா பாடல் குறித்து பேசியுள்ள பாடகி த்வனி பனுஷாலி, பிரதமர் மோடியுடன் இணைந்து மீண்டும் ஒரு பாடல் அமைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Actor Rahman: தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பது இல்லை.. மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கு.. நடிகர் ரகுமான்!

