மேலும் அறிய

Dhruva Natchathiram: ”துருவ நட்சத்திரம் படத்தை முடிக்க பணம் இல்லாததால் நடிக்க ஆரம்பித்தேன்” - கௌதம் வாசுதேவ் மேனன்

Gautham Menon: காதல் மொழி பேசும் இயக்குநராக மட்டுமே இருந்த கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். லியோ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் படத்தை முடிக்க பணம் இல்லாததால் நடிக்க வந்ததாக என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் ரொமான்டிக் படங்களைக் கொடுத்து தனக்கு என தனி ஸ்டைலை உருவாக்கி கொண்டவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன் (Gautham Menon). இவர் 2001ஆம் ஆண்டு மாதவன், ரீமாசென் நடிப்பில் வெளிவந்த மின்னலே படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்ததாக காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை இயக்கி உள்ளார். 

காதல் மொழி பேசும் இயக்குநராக மட்டுமே இருந்த கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். சமீப ஆண்டுகளாக படங்களில் பிஸியாக நடித்து வரும் கௌதம், விஜய் நடித்துள்ள லியோ படத்திலும் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னதாக, துருவ நட்சத்திரம் படத்தை இயக்குவதாக கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்திருந்தார். ஆரம்பத்தில் இதில் சூர்யா நடிப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் விக்ரம் இணைந்தார். ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் என பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

துருவ நட்சத்திம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த போது படத்தின் வெளியீட்டு பணிகள் தொடர்ந்து தள்ளிப்போனது. இதற்கிடையே 2017ஆம் ஆண்டு துருவ நட்சத்திரம் டீசர் வெளியாகி பெரிதாக கவர்ந்தது.  அதன் பின் ஒரு மனம் பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், தொடர்ந்து அப்டேட் எதுவும் வரவில்லை. பட ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தற்போது பலகட்ட தடைகளைத் தாண்டி வரும் நவம்பர் 24ஆம் தேதி திரைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். அதில், துருவ நட்சத்திரம் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்தது என்றும், படத்தின் டப்பிங் வேலைகளும் முடிந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

துருவ நட்சத்திரம் படத்தின் போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் பாதியில் நின்றதால், போதிய அளவு பணமில்லை என்றும், அதற்காக தான், தான் படங்களில் நடிக்க ஆரம்பித்ததாகவும், அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளை முடித்துள்ளதாகவும் கௌதம் கூறியுள்ளார். 

துருவ நட்சத்திரம் படத்தின் கிளைமாக்ஸ் முடியாமலேயே இருக்கும் என்றும், படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தால் அடுத்த பாகம் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Deepika Padukone: துப்பாக்கியுடன் வில்லி சிரிப்பு.. 'சிங்கம்' சீரிஸில் இணைந்த தீபிகா படுகோன்.. ஃபயர் விடும் ரசிகர்கள்!

Suriya: சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை பார்த்து அசந்துபோன விஜய்.. லோகேஷ் சொன்ன தகவல்!

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget