Rakul Preet: ”மனமும், செயலும் ஒன்றாக வாழ வேண்டும்” இந்தியன் 2 பட நடிகைக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் இந்திய திரைப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
![Rakul Preet: ”மனமும், செயலும் ஒன்றாக வாழ வேண்டும்” இந்தியன் 2 பட நடிகைக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி PM Narendra Modi Congratulates Actors Rakul Preet, Jackky Bhagnani On Their Wedding Rakul Preet: ”மனமும், செயலும் ஒன்றாக வாழ வேண்டும்” இந்தியன் 2 பட நடிகைக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/22/5cf1d6483e787bc9bfe5437026eeda7c1708617214316102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் மற்றும் தயாரிபபாளர் ஜாக்கி பாக்னானி இருவரும் நேற்று பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பல வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி கோவாவில் தங்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள். இந்த புதுத் தம்பதியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆனந்த் கராஜ் என்ற சீக்கிய முறைப்படி இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அதேசமயம் திரையுலகை பொறுத்தவரை நடிகர்கள் அர்ஜுன் கபூர், வருண் தவான், ஷாஹித் கபூர், சோனம் கபூர், அக்ஷய் குமார், பூமி பெட்னேக்கர், ரித்தேஷ் தேஷ்முக், டைகர் ஷெராப் உள்ளிட்ட சில பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் நேற்று தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது திருமண புகைப்படங்களை வெளிட்டார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் நடிகை இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அதேபோல் பிரதமர் மோடியும் இந்த புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், “நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் இனிய பயணத்தை தொடங்கும் ஜாக்கி பக்னானி - ரகுல் ப்ரீத் சிங் தம்பதிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்வரும் காலங்களில் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு மனமும், செயலும் ஒன்றாகவே இருக்கும் வகையில் வாழ வேண்டும்.
அனைத்து சூழ்நிலைகளிலும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, கனவுகள், ஆசைகளை நனவாக்கும் தேடலில் ஒருவர் கைகளை மற்றொருவர் பற்றிக்கொண்டு, அன்புடன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, குறைகளை ஆமோதித்து, நல்லனவற்றை கற்றுக்கொள்ளும் பயணமாக அமையும் வகையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.
உங்கள் திருமணத்திற்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி. இந்த முக்கியமான நாளில் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என மிகவும் அன்புடன் வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமன்னா, த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ரகுல் ப்ரீத் மற்றும் ஜாக்கி பாக்னானி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
இந்தியன் 2
ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அது மட்டுமல்ல அவருடைய காதலரான ஜாக்கி பாக்னானி மியா ஃபோட்டோ மியான் என்ற படத்தில் வெளியீட்டுக்கான் பணியில் தீவிரமாக உள்ளார். இந்த படத்தில் அக்ஷய் குமார் சோனா பிருத்திவிராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)