Pichaikkaran 3: பிரம்மாண்டமாக உருவாக உள்ள பிச்சைக்காரன் 3.... பட்ஜெட் இத்தனை கோடிகளா?
பிச்சைக்காரன் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிச்சைக்காரன் 3 பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என அடுத்தடுத்த கட்டங்களில் பயணம் செய்து வெற்றிகளைக் குவித்த விஜய் ஆண்டனி, தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். பிச்சைக்காரன் 2 படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில் வசூலையும் குவித்துள்ளது. இந்நிலையில் பிச்சைக்காரன் 3 பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சலீம் உள்ளிட்ட இவரது ஆரம்பகால படங்கள் த்ரில்லர் ஜானரில் வெளியாகி ரசிகர்களுக்கு சிறப்பான அனுபத்தைக் கொடுத்தன. தொடர்ந்து கமர்ஷியல் ஹீரோவாகவும் தன்னை வெளிப்படுத்தினார் விஜய் ஆண்டனி. இவரது காளி உள்ளிட்ட படங்கள் இவரை வேறு மாதிரியாக வெளிப்படுத்தின. இவர் தன்னுடைய படங்களுக்கு மட்டும் இசையமைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அந்த அளவிற்கு தன்னுடைய படங்களில் இவர் பிசியாக இருந்தார்.
தற்போது இவர் பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். பிச்சைக்காரன் படம் கடந்த 2016ஆம் ஆண்டில் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி, இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சசி வேறு படத்தில் பிசி ஆக இருந்ததால் விஜய் ஆண்டனி படத்தை தானே இயக்கினார்.
சென்னை மலேசியா உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், மலேசியாவில் நடந்த சூட்டிங்கின்போது, விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. முகம் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். விஜய் ஆண்டனி குணமடைந்ததை அடுத்து மீண்டும் படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கினார்.
இதனிடையே இந்தப் படம் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் கடந்த மே மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியான நிலையில், இரு மொழி ரசிகர்கள் மத்தியிலும் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கும் முயற்சியும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படத்தின் படபிடிப்பு வரும் 2025ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளதாகவும்,100 கோடி பட்ஜெட்டில் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.