Pathu Thala First Single: சிம்பு பிறந்தநாளில் மாஸாக வெளியாகும் “பத்து தல பாடல்” ... மாஸாக வந்த அறிவிப்பு..!
நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கம்பேக் கொடுத்த சிம்பு
நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் வெளியானது. இதனையடுத்து, கடந்தாண்டு ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்த மஹா படத்தில் சிறப்பு தோற்றத்திலும், இதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் ஹீரோவாகவும் சிம்பு நடித்திருந்தார். செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியான வெந்து தணிந்தது காடு படம் சிம்புவுக்கு சிறப்பான வெற்றியை கொடுத்தது.
View this post on Instagram
“பத்து தல” படம்
இந்த படங்களை அடுத்து அவர் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் கன்னட படமான மஃப்டியின் ரீமேக் ஆகும். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படம் கடந்த டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்த நிலையில் மார்ச் மாதம் 30 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
இதனிடையே சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3 ஆம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு பத்து தல படத்தின் முதல் பாடலாக ”நம்ம சத்தம்” என தொடங்கும் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















