Pa Ranjith : தங்கலான் ரிலீஸூக்கு முன் திட்டம்போட்டு நெகட்டிவிட்டி பரப்புனாங்க.. ரஞ்சித் குற்றச்சாட்டு
பேப்பர் கப் தீண்டாமை பற்றிய தனது கருத்தை திட்டம்போட்டு தங்கலான் ரிலீஸூக்கு முன் ஒரு சாரார் பரப்பியதாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பா ரஞ்சித்
பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. பல்வேறு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் இப்படம் வெகுஜனத்திடம் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்றுள்ளது. தங்கலான் படம் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பு பா ரஞ்சித் சில ஆண்டுகள் முன்பாக பேசிய கருத்து சமூக வலைதளத்தில் வைரலானது. சாதிய பாகுபாடு மிகவும் நவீன வடிவத்தை ஏற்றுள்ளது.
இன்று நாம் பேப்பர் கப்பில் டீ குடுப்பது கூட ஒரு நவீன தீண்டாமைதான் என்று ரஞ்சித் முன்பு ஒருமுறை தெரிவித்திருந்தார்.
தங்கலான் ரிலீஸூக்கு முன்பாக இந்த கருத்து மீண்டும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்படியென்றால் வாழை இலையில் சாப்பிடுவதும் தீண்டாமைதான் , என்று பல்வேறு விதமாக அவரது கருத்து ட்ரோல் செய்யப்பட்டது. இது குறித்து தற்போது இயக்குநர் ரஞ்சித் விளக்கமளித்துள்ளார்.
திட்டம்போட்டு நெகட்டிவிட்டியை பரப்புகிறார்கள்
“சமூக நீதி என்று பேசக்கூடிய இந்த தமிழ் மண்ணில் இவர்களால் நான் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நான் என்றைக்கோ பேசிய பேப்பர் கப் பற்றிய கருத்தை மறுபடியும் கொண்டுவந்து பேசி அதை ஒரு ட்ரோல் கண்டெண்டாக மாற்றிவிட்டார்கள். தீண்டாமை என்பதை இவர்கள் ஒரு நகைச்சுவையான விஷயமாக மாறிவிட்டது. என் மேல் வெறுப்புணர்வை உண்டாக்குவதற்கு திட்டம்போட்டே செய்யும் செயல் இது. இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்பதால் நாம் கவலைப்பட தேவையில்லை.
என்மீது வெறுப்பை முன்வைப்பது மூலமாக நீங்கள் தற்காலிகமான மகிழ்ச்சியை அடையலாம். ஆனால் அது தற்காலிகமானதுதான் . உங்களால் என்னை ஏதுமே செய்ய முடியாது என்பதை தான் என்னுடைய படைப்பு சொல்கிறது. என்னுடைய கலையை நான் முழுதாக நம்புகிறேன். அதை கொண்டாடும் மக்கள் இருக்கிறார்கள். அதை எல்லாம் பார்க்கும்போது இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் வன்மத்தை கக்கும் இடத்திற்கு போகிறார்கள்” என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்
"Some have intentionally spread negativity on me, before #Thangalaan release, by sharing 'PAPER CUP' ideology which I spoke a few years back. They have made the UNTOUCHABILITY as a troll content. It's because of the VENGEANCE they have on me"
— AmuthaBharathi (@CinemaWithAB) August 22, 2024
- PaRanjith pic.twitter.com/8Ne8LFLNp9