Pa Ranjith on Kaala: 'காலா வெற்றி பெற்றது, ஆனால் மக்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை'.. பா.ரஞ்சித்தின் ஓபன் ஸ்டேட்மெண்ட்!
"காலா வெற்றி பெற்றது, எனது தயாரிப்பாளர் எந்த நஷ்டத்தையும் சந்திக்கவில்லை, ஆனால் மக்கள் அதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை" – என்று பா.ரஞ்சித் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். சார்பட்டா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆக்ஷன் படத்தில் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், பா.ரஞ்சித் அட்டகத்தி பாணியில் அழகிய காதல் கதையை இயக்குவதாக அறிவித்தார். இதன்படி, நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற காதல் படத்தை தற்போது சத்தமே இல்லாமல் இயக்கி முடித்துள்ளார்.
Bookings open for #NatchathiramNagargiradhu
— Mayajaal Multiplex/Mall (@MayajaalECR) August 29, 2022
A #PaRanjith film
Book your tickets now:https://t.co/8rbqLqdTrV@beemji @kalidas700 @KalaiActor @officialdushara pic.twitter.com/HVNJl22AFm
அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் படங்களின் வெற்றி தோல்வி பற்றி பேசியிருந்தார். அவர் “என் படம் வெற்றி பெற்றதாக இங்கு யாரும் சொல்ல மாட்டார்கள். வெற்றிகரமான அட்டகத்தியைக் கூட ஸ்லீப்பர் ஹிட் என்று சொல்வார்கள். என் படம் வெற்றி பெற்றாலும் யாரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஒரு பொது மன்றத்தில், யாரும் முன் வந்து அதை அறிவிக்க மாட்டார்கள்.அனேகமாக சர்ப்பட்ட அந்த அம்சத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படமாக இருக்கலாம். திரையரங்கில் ரிலீஸ் செய்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என்று மக்கள் சொன்னார்கள். இங்கே, பிரச்சனை ஏற்றுக் கொள்வதில் தான் உள்ளது. காலாவின் உதாரணத்தை இங்கே குறிப்பிடலாம். உண்மையில் காலா வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம்.
காலா வெற்றி படம் இல்லையா?
படத்தின் வெற்றியை பாக்ஸ் ஆபிஸ் வசூலை வைத்து தீர்மானிக்கிறார்கள், அப்படி இருந்தால் காலா வெற்றிதான். காலா படத்தால் எனது தயாரிப்பாளருக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை. ஆனால், இங்குள்ளவர்கள் அதை ஏற்கவில்லை. கலையை மதித்து அழகியல் மற்றும் ஈர்க்கும் விதத்தில் படத்தையும் எடுத்துள்ளேன். அந்த கோணத்திலும் பார்த்தால் படம் வெற்றி என்றே சொல்லலாம். அந்த விஷயத்தில் எந்தப் படமும் முட்டாள்தனமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தாலும், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் கருத்தில் கொண்டு வெற்றி பெற்றதாகக் கருதப்படும். இங்கு எனது படத்தை வெற்றி, தோல்வி என்று அழைப்பதில் சிக்கல் உள்ளது. எனது படங்களின் வெற்றி தோல்வியை ஒப்புக்கொள்ள யாரும் தயாராக இல்லை. நான் இதை ஒரு வேடிக்கையான குறிப்பில் பார்க்கிறேன், மக்கள் வெளிப்படையாக விஷயங்களை ஒப்புக் கொள்ளும் அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்", என்று கூறியிருந்தார்.
இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா படத்திற்கு முன்பு பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றையே படமாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. சார்பட்டா படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பிற்கு பிறகு மீண்டும் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்தப்படம் வந்துள்ளது.