OTT Growth | அசுர வளர்ச்சியில் OTT தளங்கள்: மாத சந்தா கட்டணங்கள் உயர வாய்ப்பு!
நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தற்போது உலகம் முழுக்க 214 மில்லியன் கட்டண பயனாளர்கள் உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரபல ஓடிடி நிறுவனமாக செயல்பட்டு வரும் நெட்ஃபிளிக்ஸ் தனது புதிய பயனாளர்கள் குறித்த விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் 4.4 மில்லியன் கட்டண பயனாளர்கள் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் புதிதாக இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல மொழி திரைப்படங்கள், வெப் தொடர்கள் , ஆவண படங்கள் , குழந்தைகளுக்கான தனி பிரிவு என ஒட்டுமொத்த பொழுதுபோக்கு கட்டமைப்பையும் ஒருங்கே பெற்றிருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். கொரோனா உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டின் இறுதி 6 மாதங்களில் 16 சதவிகிதம் அதிகப்படியான வருவாயை ஈட்டியது நெட்ஃபிளிக்ஸ். தற்போது ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி வருமானத்தை நெட்ஃபிளிக்ஸ் கொண்டுள்ளது என கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 14.5 கோடி அதிகம் என கூறப்படுகிறது. நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தற்போது உலகம் முழுக்க 214 மில்லியன் கட்டண பயனாளர்கள் உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் Ted Sarandos அறிவித்துள்ளார். இது வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அதிக பார்வையாளர்களை கொண்ட முதல் கொரியன் வெப் தொடர் ஸ்குவிட் கேம்ஸ் என்றை அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Squid Game is just the latest in a long line of inventive, gripping, and totally addictive Korean shows on Netflix.
— Netflix (@netflix) October 12, 2021
Here are a few suggestions for which ones to watch next — and who knows... you might even see some familiar faces!
Squid Game Profile Icons are now on Netflix and I'm immediately changing to Sae-byeok! pic.twitter.com/rhNQxPA5vx
— Netflix (@netflix) October 14, 2021
Over-the-top media service என அழைக்கப்படக்கூடிய OTT தளங்களின் ஆதிக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலமான 2021 - 2022 ஆம் காலக்கட்டத்தில் தோராயமாக சொல்லப்போனால் கிட்டத்தட்ட 18 மாதங்களில் ஓடிடி தளங்கள் அடைந்த வளர்ச்சி அபாரமானது. Help Me Stream Research Foundation என்னும் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையின் படி ஓடிடி தளங்களின் வளர்ச்சி அடுத்த ஆண்டு 26 சதவிகிதம் அதிகரிக்கும் என்கின்றது அந்த ஆய்வறிக்கை. ஆனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஒடிடி நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்காது என Help Me Stream Research Foundation ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.ஓடிடி நிறுவனங்கள் அதிக பார்வையாளர்களை கொண்டிருந்தாலும் அவை மிக குறைந்த வருவாயையே ஈடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. எனவே புதிய பயனாளர்களை கவரும் பொருட்டே குறைந்த விலையிலான சந்தாவை ஓடிடி நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன. முழுவதுமாக ஓடிடி கோலோச்சும் நேரத்தில் அதன் விலையும் வரும் காலங்களில் கணிசமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.