மனைவியை கிண்டல் செய்த நிகழ்ச்சி தொகுப்பாளர்..! ஆஸ்கர் விழாவில் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்!
Oscars 2022: ஆஸ்கர் விழாவில் மனைவியை கிண்டல் செய்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்.
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் (Will Smith), தனது மனைவி ஜடா பிங்கெட் (Jada Pinkett) பற்றி கேலி செய்ததற்காக ஆஸ்கர் விருது நிகழ்வில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை (Chris Rock) கன்னத்தில் அறைந்தார். இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆஸ்கர் விருதுகள் நிகழ்வு தொடங்கி சிறிது நேரத்தில், கிறிஸ் ராக் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்க மேடைக்கு வந்தார். அப்போது அவர் வில் ஸ்மித் மனைவி ஜடா, GI ஜேன் 2 திரைப்படத்தில் நடிக்க தலை முடி முழுவதையும் எடுத்து விட்டார். அவரது மொட்டையடிக்கப்பட்ட தலையை பற்றி கிறிஸ் ராக் கேலி செய்தார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித கிறிஸ் ராக்கை திட்டினார். பின்னர், அவர் சிறந்த நடிகருக்கான விருது வழங்கியபோது., மேடைக்கு சென்றவர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட்டிற்கு (Jada Pinkett) அலோபெசியா (alopecia) என்ற நோயால் பாதிப்பட்டதால், ஏற்கனவே முடி கொட்டும் பிரச்சினை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
VIA JAPANESE TELEVISION: The uncensored exchange between Will Smith and Chris Rock pic.twitter.com/j0Z184ZyXa
— Timothy Burke (@bubbaprog) March 28, 2022
ஜடா இது குறித்து, தனக்கு அலோபீசியா இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் முடி உதிர்தல் பிரச்சினை இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் குறிப்பிட்டிருந்தார். அவர் 2018 இல் இதைப் பற்றி முதன்முதலில் மனம் திறந்தார். மேலும் சமூக ஊடகங்களில் இந்த நிலையில் வாழ்வதில் தனக்கு உள்ள சவால்களைப் பற்றி பேசியுள்ளார். ஷவரில் கைநிறைய முடி வந்த பிறகு, தனது தலைமுடியை குட்டையாக வெட்ட முடிவு செய்ததாக அவர் கூறியிருந்தார். "என் வாழ்க்கையில் நான் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த சமயங்களில் இதுவும் ஒன்று. அதனால்தான் நான் என் தலைமுடியை வெட்டினேன். மேலும், தொடர்ந்து வெட்டுவேன்., ”என்று அவர் கூறியிருந்தார். இது ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு ஆகும். அதாவது, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் திறன் குறைய தொடங்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்