Everything Everywhere all at once: 7 விருதுகளை அள்ளிய எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
Everything Everywhere all at once:நடந்து முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், 7 ஆஸ்கர்களை தட்டிச்சென்ற எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
டேனியல் க்வான் மற்றும் டேனியல் ஷ்ரீநெட் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம், எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ். இதில், மிச்செல் ஹீயூ, ஜேம்ஸ் ஹாங், ஜேமி லீ கர்டஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தமாதம் 130ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவில், எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்பட 7 விருதுகளை தட்டிச்சென்றது. இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களையும், படம் எப்படி 7 விருதுகளையும் வென்றது எப்படி என்பது குறித்தும் பார்க்கலாம் வாங்க.
சிறப்பான கதையம்சம்:
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் அமெரிக்காவில் குடி பெயர்ந்துள்ள சீன குடும்பத்திடமிருந்து ஆரம்பிக்கின்றது. முதல் காட்சியில் மிக சாதாரணமான கதையாக தோன்றும் இப்படம், பிறகு ஆக்ஷன், காமெடி, ஆல்ஃபா வர்ஸ், மல்டி வர்ஸ் என வரிசையாக காண்போருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கின்றது. இப்படி பல சிறப்பம்சங்கள் படத்தில் இருந்ததனால், மக்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படமாக எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் மாறியது. இதனால், சிறந்த படத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இப்படம் தேர்வு செய்யப்பட்ட பிற திரைப்படங்களை முந்திச்சென்று சிறந்த படத்திற்கான விருதினை பெற்றது.
இப்படத்திற்கான கதை எழுதும் பணி, 2010ஆம் ஆண்டே தொடங்கிவிட்டதாம். இப்படத்தினை இயக்கியவர்கள் டேனியல் க்வான் மற்றும் டேனியல் ஷ்ரீநெட். படப்பிடிப்பு பணிகள் கொராேனா நோய் பரவலிற்கு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அடுத்து இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தள்ளிப்போடப்பட்டன. ஒரு வழியாக படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. இப்படம் இத்தனை விருதுகளை வெல்வதற்கு மக்களின் ஆதரவும் முக்கிய காரணமாக கூறப்பட்டது.
சுவாரஸ்ய தகவல்கள்:
- படத்தில் உபயோகிக்கப்பட்ட ஹாட் டாக் கைகள் உண்மையிலேயே வடிவமைக்கப்படவை. இதை க்ராஃபிக்ஸ் மூலம் உண்மையான கைகள் போல மாற்றியமைத்துள்ளனர்.
- சில படங்களின் டைட்டில் மற்றும் படம் குறித்த தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அப்படி இந்த படத்தின் தகவல்களும் வெளியுலகிடமிருந்து ஷூட்டிங் சமயத்தில் மறைக்கப்பட்டிருந்தது. எ வுமன் ட்ரைஸ் டு டூ ஹெர் டாக்ஸஸ் (A Woman Tries to Do Her Taxes) என்பதுதான் இப்படத்திற்கு சீக்ரட் டைட்டிலாக வைக்கப்பட்டிருந்தது.
- சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்ற கி ஹியூ க்யுவான் 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில்தான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
- இப்படத்திறகான சிஜிஐ பணிகள், கொரோனா ஊரடங்கின் போது வீட்டிலிருந்தபடியே பார்க்கப்பட்டது. அதிலும், இந்த கிராஃபிக்ஸ் வேலைகள் செய்த 5 பேரும் முறையாக கல்லூரிக்கு சென்று கிராஃபிக்ஸ் பயிலாதவர்கள் என்பது ஆச்சரியத்திற்குரிய விஷயம்.
- படப்பிடிப்பு நிறைவடைவதற்கு ஒரு நாளிற்கு முன்பு, கொராேனா பரவலால் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் சையின்ஸ் ஃபிக்ஷன் கதையையும் பொது மக்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்துள்ளனர். இதில், மார்வல் படங்கள் அளவிற்கு பிரம்மாண்டம் காட்டாமல், கோஸ்ட் பஸ்டர்ஸ் படங்கள் அளவிற்கு பிரம்மிப்பூட்டியிருந்தனர். படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு காரணமாக பார்க்கப்பட்டது, இதன் படத்தொகுப்பும் கிராஃபிக்ஸும்தான்.
சிறப்பான கதாப்பாத்திரங்கள்:
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை ஆகிய விருதுகளையும் பெற்றது. சிறந்த நடிகைக்கான விருதினை மிசெல் யோ பெற்றுக்கொண்டார். மொத்த படத்தின் கதையையே தாங்கும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தினார். இவருக்கு ஆஸ்கர் கிடைத்தது, பலரும் இந்த விருதுக்கு அவர் தகுதியானவர்தான் என்ற கருத்தினை தெரிவித்திருந்தனர்.
மிசெல் யோவை அடுத்து சிறந்த துணை நடிகருக்கான விருதை படத்தில் அவருக்கு கணவராக நடித்திருந்த கி ஹியூ க்யுவான் வென்றார். இவர், அப்படத்தில் ஆல்ஃபா ஆணாகவும் பிறகு இளகுவான மனம் படைத்த ஆணாகவும் வந்து அனைவரையும் கவர்ந்தார். சிறந்த துணை நடிகைக்கான விருது அதே படத்தில் நடித்திருந்த ஜேமி லீ கர்டீஸிற்கு கிடைத்தது. இவர், படத்தில் ஒரு சில சீன்களில் வில்லியின் கைக்கூலியாகவும், ஒரு சில காட்சிகளில் சாதாரண பெண்ணாகவும் வந்து அனைவரையும் கவர்ந்தார். இவருக்கும் இவ்விருது கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.
மொத்தத்தில் சிறந்த படம், சிறந்த துணை நடிகர்-நடிகை, சிறந்த நடிகைக்கான, சிறந்த இயக்கம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த எழுத்து ஆகிய பிரிவுகளில் மொத்தம் 7 விருதினை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் தட்டிச்சென்றுள்ளது.