Oo Solriya Oo Oo Solriya : ஆண்ட்ரியா பாட! சமந்தா ஆட! - வெளியானது புஷ்பா படத்தின் ஐட்டம் நம்பர்!
ஐடம் நம்பர் பாடல்கள் என்றாலே இரட்டை அர்த்தங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இந்த பாடலில் உள் வரிகள் பெண்களின் உருவ கேலி, நிற கேலி உள்ளிட்டவை குறித்து பேசுவதாக இருக்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் சினிமாவிலும் கவனம் பெற தொடங்கியுள்ளார். அதுமட்டுமல்லாது ஹாலிவுட் சினிமாவிலும் கூட நடிக்க தொடங்கியுள்ளார். இது ஒரு புறம் இருக்க அவர் , அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகும் ‘புஷ்பா’ திரைப்படத்தில் ஐடம் நம்பர் கூறப்படும் குத்து பாடலில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சத்தில் இருக்கும் பொழுது , பெரும்பாலும் நடிகைகள் இப்படியான ஐடம் நம்பர் பாடல்களில் அதுவும் வேறு ஒருவரின் படங்களில் நடிக்க விரும்ப மாட்டார்கள் என்றாலும், சமந்தாவின் துணிச்சலை பல சினிமா விமர்சகர்கள் பாராட்டினர். இந்நிலையில் சமந்தா ஆடிய பாடல் o solriya..oo solriya பாடல் வெளியாகியுள்ளது. இது ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது. வரிக்காணொளியாக வெளியாகியுள்ள இந்த பாடல் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
Queen @Samanthaprabhu2's SIZZLING SONG OF THE YEAR #OoSolriyaOoOoSolriya out Now 🔥🔥
— Lyca Productions (@LycaProductions) December 11, 2021
▶️ https://t.co/3p2vAn2PYF
A Rockstar @ThisIsDSP Musical 🎶
Sung by @andrea_jeremiah
Lyrics by @Viveka_Lyrics #PushpaTheRise#PushpaTheRiseOnDec17 pic.twitter.com/1mSAT7xUuL
தற்போது வெளியாகியுள்ள சமந்தாவின் ஐடம் நம்பர் பாடலை, பிரபல நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். பாடலுக்கான வரிகளை விவேகா எழுதியுள்ளார்.பொதுவாகவே படத்தின் இடையில் வரும் ஐடம் நம்பர் பாடல்கள் என்றாலே இரட்டை அர்த்தங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இந்த பாடலில் உள் வரிகள் பெண்களின் உருவ கேலி, நிற கேலி உள்ளிட்டவை குறித்து பேசுவதாக இருக்கிறது.புஷ்பா படத்திற்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் DSP இசையமைத்துள்ளார். படத்தை சுகுமார்மிகப்பெரிய பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ’புஷ்பா’ படத்தை தயாரித்து வருகிறது. படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க , வில்லனாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் ஃபஹத் பாசில். புஷ்பா படம் இரண்டு பாகங்களாக தமிழ், தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.வருகிற கிருஷ்துமஸ் பண்டிகையை குறிவைத்து படம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக 5 மொழிகளில் படத்தின் டிரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் டிரமாவாக உருவாகியுள்ள புஷ்பா படத்திற்கு டோலிவுட்டில் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.