மேலும் அறிய

N.S.Krishnan: நகைச்சுவையால் சிந்திக்க வைத்த சீர்திருத்தவாதி; கர்ணனாக விளங்கிய என்.எஸ். கிருஷ்ணன் பிறந்தநாள்

N.S. Krishanan : யார் மனதையும் புண்படுத்தாமல் கண்ணியமான ஒரு நகைச்சுவையாளனாக திகழ்ந்த என்.எஸ்.கே பிறந்தநாள் இன்று.

நகைச்சுவை மூலம் சிந்திக்க வைத்த சீர்திருத்த போராளி... கர்ணனாக விளங்கிய கிருஷ்ணன் என்ற எஸ்.எஸ்.கே பிறந்தநாள் சிறப்பு பதிவு  

நகைச்சுவை என்றால் அந்த நொடி மட்டும் சிரித்து விட்டு கடந்து போகும் ஒரு விஷயம் அல்ல அதன் மூலம் மக்களை சீர்படுத்தி சிந்திக்க வைக்கும் ஒரு தூண்டுகோல் என்பதை முயற்சி செய்து வெற்றியும் கண்டவர். நடிகர், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகர், எழுத்தாளர், நகைச்சுவை கலைஞர் என பன்முகம் கொண்ட சகலகலா வல்லவனாக திகழ்ந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 115வது பிறந்த தினம் இன்று. அவரின் பிறந்தநாளை ஒட்டி அவரின் பெருமைகளை நினைவுகூறும் ஒரு சிறப்பு பதிவு. 

N.S.Krishnan: நகைச்சுவையால் சிந்திக்க வைத்த சீர்திருத்தவாதி; கர்ணனாக விளங்கிய என்.எஸ். கிருஷ்ணன் பிறந்தநாள்
தனி ட்ராக் முன்னோடி :

"இந்தியாவின் சார்லி சாப்ளின்'' என கொண்டாடப்படும் என்.எஸ்.கே தான் நகைச்சுவைக்கு என தனி ட்ராக் கொண்டு வர முன்னோடியாக இருந்தவர். தனது முதல் படமான சதி லீலாவதியில் தனக்கு தானே அதை எழுதினார். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்த கலைவாணர் அதன் ஆதாரமாக தீண்டாமை, மதுவிலக்கு, சாதி கொள்கை ஒழிப்பு, பெண் விடுதலை, ஒடுக்கப்பட்டோர் உரிமை உள்ளிட்ட சமூக பிரச்சினைகளுக்கு நகைச்சுவை மூலம் தீர்வு சொல்வது போல இயல்பாக சாமானிய மக்களுக்கு கருத்துக்களை கொண்டு சேர்ப்பது தான் அவரின் தனிச்சிறப்பு. 

கர்ணனாக இருந்த கிருஷ்ணன் :

தனக்கென எதுவுமே வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தர்மம் செய்தே  வாழ்ந்து பழகிய இந்த வள்ளல் தான் இறக்கும் தருவாயில் கூட தன்னிடம் இருந்த வெள்ளி கூஜாவையும் ஏழை தொழிலாளியின் திருமணத்திற்காக கொடுத்து பிறகு தான் தனது கடைசி மூச்சை விட்டார். அவருக்கு கிருஷ்ணன் என்ற பெயரை காட்டிலும் கர்ணன் என வைத்து இருக்கலாம். எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் ஜாம்பவான்கள் கூட கலைவாணரிடம் இருந்து இந்த வள்ளல் தன்மையை வளர்த்து கொண்டார்கள் என்பதை அவர்களே பல இடங்களில் பதிவு செய்துள்ளார்கள்.

N.S.Krishnan: நகைச்சுவையால் சிந்திக்க வைத்த சீர்திருத்தவாதி; கர்ணனாக விளங்கிய என்.எஸ். கிருஷ்ணன் பிறந்தநாள்

அபூர்வ மனிதர்:

மற்றவர்களை கலாய்த்து பேசுவது தான் நகைச்சுவை என இருக்கும் இந்த காலகட்டத்தில் யார் மனதையும் புண்படுத்தாமல் கண்ணியமான ஒரு நகைச்சுவையாளனாக திகழ்ந்தவர் என்.எஸ்.கே மட்டுமே. தனது கலை உணர்வு வறண்டு விடுவதற்கு முன்னரே மறைந்து விட வேண்டும் என்ற தனது எண்ணம் போலவே 49வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். கலைவாணர் போன்ற சாமர்த்தியசாலிகள், அபூர்வ மனிதர்கள் பல நூற்றாண்டு காலம் வாழ்ந்து இந்த நாட்டை செம்மைப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் தனது விருப்பத்தின் படியே 50 வயதிற்கு முன்னரே செயல்படுவதை நிறுத்திக்கொண்டு பயணத்தை முடித்துக் கொண்டார்.  

இந்த மகா கலைஞன் வாழ்ந்தது என்னவோ 49 ஆண்டுகள் தான் என்றாலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் தனது அசாத்தியமான நகைச்சுவை மூலம் தொலைநோக்கு கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தது  ஆயிரம் காலங்களை கடந்தும் நிலைத்து நிற்கும். இன்றளவும் அவரின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகம் என்றால் அது மிகையல்ல. 
   
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வெங்கடாஜலபதி மன்னிச்சுடு" திருப்பதி லட்டு விவகாரம்.. விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Breaking News LIVE: அனுரா குமார திசாநாயக்க vs சஜித் பிரேமதாச.. இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றியாளர் யார்?
அனுரா குமார திசாநாயக்க vs சஜித் பிரேமதாச.. இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றியாளர் யார்?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manimegalai reply to kuraishi |”சொம்புக்குலாம் மரியாதையா! அப்போ அந்த WHATSAPP மெசெஜ்”மணிமேகலை பதிலடிSchool Students reels | பேருந்து டாப்பில் ஏறி REELS.. பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி!Anura Kumara Dissanayake | இலங்கை அதிபராகும் கூலித்தொழிலாளியின் மகன்!யார் இந்த AKD?Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வெங்கடாஜலபதி மன்னிச்சுடு" திருப்பதி லட்டு விவகாரம்.. விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Breaking News LIVE: அனுரா குமார திசாநாயக்க vs சஜித் பிரேமதாச.. இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றியாளர் யார்?
அனுரா குமார திசாநாயக்க vs சஜித் பிரேமதாச.. இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றியாளர் யார்?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! எப்போது தெரியுமா?
பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! எப்போது தெரியுமா?
IND vs BAN: பிரம்மாண்ட வெற்றி! வங்கதேசத்தை சுருட்டி வீசிய அஸ்வின்! 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!
IND vs BAN: பிரம்மாண்ட வெற்றி! வங்கதேசத்தை சுருட்டி வீசிய அஸ்வின்! 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!
திரைப்பட விமர்சகர்களுக்கு சினிமா பத்தி என்ன தெரியும்? பிரபல நடிகர் பார்த்திபன் ஆதங்கம்
திரைப்பட விமர்சகர்களுக்கு சினிமா பத்தி என்ன தெரியும்? பிரபல நடிகர் பார்த்திபன் ஆதங்கம்
Watch Video:
Watch Video:"பாப்பா நான் இருக்கேன் பா மதராவும் இருப்பேன் பா" - மகனுடன் ஹர்திக் பாண்டியா! வைரல் வீடியோ
Embed widget