Nidhhi agerwal : பெண்களுக்கு உச்சம்.. ஆணுறை விளம்பரத்தில் நிதி அகர்வால்! ஆதரவும், எதிர்ப்பும்!!
நிதி அகர்வால் தற்போது விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். ஆணுறை தொடர்பான விளம்பரமாக அது உள்ளது.
நடிகர் ஜெயம் ரவியுடன் 'பூமி' படத்திலும், சிம்புவுடன் 'ஈஸ்வரன்' படத்திலும் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். அவர் நடித்த அந்த 2 படங்களும் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியானது. ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த நிதி அகர்வால் பிஸினெஸ் மேனேஜ்மெண்டில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார், தேர்ந்த டான்சரும் கூட. அவருக்கு தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை புரிந்துக் கொள்ளவும் பேசவும் தெரியும். தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது படங்களை பதிவிடும் நிதி அகர்வாலுக்கு லைக்ஸ்கள் குவிகின்றன. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி இன்ஸ்டாவில் விளம்பரங்கள் செய்வதாலும் இன்ஸ்டா பிரபலங்கள் வருமானம் ஈட்டு வருகின்றனர். இது சின்ன பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்களுக்கும் பொருந்தும்.
View this post on Instagram
அந்த வகையில் நிதி அகர்வால் தற்போது விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். ஆணுறை தொடர்பான விளம்பரமாக அது உள்ளது. ஆணுறை குறித்து விளக்கம் அளிக்கும் நிதி, இந்த ஆணுறையை உபயோகிப்பதால் பெண்கள் உச்சநிலையில் திருப்திப்படலாம். ஆண் பெண் இருவருக்குமே உடலுறவு பிரச்சனை இல்லாமல் இன்பமாக முடியும் என தெளிவாக விளக்கம் அளிக்கிறார். நிதியின் இந்த விளம்பரத்துக்கு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏன் இப்படியான விளம்பரம் நடிக்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேவேளையில் ஆணுறை என்பது அவ்வளவு மோசமான தயாரிப்பு இல்லை என்றும், அரசாங்கமே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயம்தான் என்றும் பலரும் நிதிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
முன்னதாக, சிம்புவிற்கும், நிதி அகர்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வலம் வந்தன. இருவரும் ஈஸ்வரன் படத்தில் ஒன்றாக நடித்த போது நெருக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவின. இது குறித்து அப்போது பேசிய நிதி அகர்வால், "வதந்திகளில் சில உண்மைகள், சில பொய்கள். மிக முக்கியமானது என்னவென்றால், பெற்றோருக்கு எது உண்மை, எது இல்லை என்று தெரிந்தால் போதும் என்றார்