Diwali Priyanka Nick : சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு : மகளுடன் தீபாவளி கொண்டாடிய பிரியங்கா-நிக் ஜோனஸ்..
அவ்வப்போது அவர் பதிவிடும் புகைப்படங்களிலும் மகள் மால்தியின் முகத்தை மறைத்துதான் வெளியிடுகிறார்.
பாலிவுட் சினிமாவில் மட்டுமல்ல ஹாலிவுட் சினிமாவிலும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் திரையுலகில் நடிகரும் , பாப் இசை பாடகருமான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . இந்த தம்பதி ஆண்டு துவக்கத்தில் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை ஒன்றை வரவேற்றனர் . மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என அந்த குழந்தைக்கு பெயர் வைத்தனர். தற்போது பிரியங்கா சோப்ரா தனது குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் இருவரும் மகளுடன் முதல் தீபாவளியை கொண்டாடி , அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram
புகைப்படத்தில் தாயும் மகளும் ட்வின்னிங் மோடில் இருக்கின்றனர். 9 மாத மகள் மால்திக்கும் தான் அணிந்திருப்பதை போன்ற குட்டி லெஹங்காவை அணிவித்து பூஜை செய்கிறார் பிரியங்கா . மகளின் கையை பிடித்தப்படி பூஜையில் அமர்ந்திருக்கிறார் ஜோனஸ் . இந்த புகைப்படங்களை பகிர்ந்த ஜோனஸ் “என்னவொரு அருமையான தீபாவளி . எனது இதயங்களுடன் கொண்டாடினேன். உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் . ஒளியை நான் உங்களுக்கும் அனுப்புகிறேன்“ என குறிப்பிட்டுள்ளார். அதேபோல பிரியங்கா சோப்ரா “உண்மையிலேயே நன்றியுணர்வு நிறைந்த இதயத்தில் இருந்து, உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். மன்னிக்கவும், நான் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ஏனென்றால் இந்த கொண்டாட்டங்களிலேயே சிறிது நேரம் இருக்க விரும்பினேன்” என பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
View this post on Instagram
பிரியங்கா சோப்ரா தனது மகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். இருந்தாலும் , மகளின் முகத்தை வெளியிடவில்லை. அவ்வப்போது அவர் பதிவிடும் புகைப்படங்களிலும் மகள் மால்தியின் முகத்தை மறைத்துதான் வெளியிடுகிறார்.