New Year 2022: பிறந்தது 2022 புத்தாண்டு... வாழ்த்துகளை வாரி இறைக்கும் திரை பிரபலங்கள்...!
திரையுலக பிரபலங்கள் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு முடிவடைந்து புத்தாண்டான 2022 பிறந்திருக்கிறது. இந்த வருடத்தில் நினைத்தது நடக்க வேண்டும், துன்பங்கள் எதுவும் நேராமல் இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) January 1, 2022
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நம்பிக்கைகளைக் கொணர்வதே மாற்றம். ஓர் ஆண்டு மாறி புது ஆண்டு வருகிறதெனில், அது நம்முள் புதுப்புது நம்பிக்கைகளைப் பதியனிடுகிறது.
நம்பிக்கைகளைக் கொணர்வதே மாற்றம். ஓர் ஆண்டு மாறி புது ஆண்டு வருகிறதெனில், அது நம்முள் புதுப்புது நம்பிக்கைகளைப் பதியனிடுகிறது. இந்தப் புத்தாண்டில் உங்கள் அனைவரின் நம்பிக்கைகளும் செயலாக்கம் பெறட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 31, 2021
இந்தப் புத்தாண்டில் உங்கள் அனைவரின் நம்பிக்கைகளும் செயலாக்கம் பெறட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டும் பூச்செண்டும் என்ற தலைப்பில்,
புத்தாண்டும்
— வைரமுத்து (@Vairamuthu) December 31, 2021
பூச்செண்டும்#NewYear2022 #புத்தாண்டு #2022 pic.twitter.com/VlKIiRqqnb
“அறிவு வழிநடத்த
துணிவு துணையிருக்க
உழைப்பு செயல்படுத்த
நேர்மை நிலைநிறுத்த
என்ன செய்துறும்
இன்னல் எம்மை?
வா புத்தாண்டே
வாழ்த்துகிறோம் உன்னை
மலர்கொண்டு வா
கனி தந்து போ
மன்பதை வாழ்க
மானுடம் வெல்க” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Wishing you all a very happy new year. God bless 🤗🤗❤️❤️
— Dhanush (@dhanushkraja) December 31, 2021
இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என பதிவிட்டுள்ளார்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
— selvaraghavan (@selvaraghavan) January 1, 2022
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
❤️😍🥰🥳 pic.twitter.com/rK0pPyYK4l
இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரேம்ஜி, நடிகர் சிவா உள்ளிட்டோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
Happy new year!! #2022NewYear please be nice to all of us!!🙏🏽🙏🏽 let this new year be as clean as our table 😁😬 pic.twitter.com/FEUcJ5CKbK
— venkat prabhu (@vp_offl) December 31, 2021
இந்தப் புத்தாண்டு இந்த மேஜையை போல் சுத்தமாக இருக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#HappyNewYear2022 ❤️🤗👍 pic.twitter.com/47ChgZssG0
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 31, 2021
அதில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பாக இருக்கும்” என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்