மேலும் அறிய

Pradeep Ranganathan: "சார் சொல்ல மாட்டியா” .. வெற்றிமாறனை பாராட்டிய பிரதீப் ரங்கநாதனுக்கு நேர்ந்த கதி..!

விடுதலை படத்தை பாராட்டி ட்வீட் போட்ட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்துள்ளனர். 

விடுதலை படத்தை பாராட்டி ட்வீட் போட்ட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்துள்ளனர். 

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளார். மேலும் ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன்,  கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

முன்னதாக விடுதலை  படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தியேட்டரில் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.  நாளுக்கு நாள் காட்சிகள் அதிகமாகி ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நடிகர் சூரி தொடங்கி படத்தில் நடித்த பலரின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சூரியும் அறிக்கை ஒன்றை வெளியீட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். 
 
அதேசமயம் பிரபலங்கள் பலரும் விடுதலை படத்தை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலை படம் சூப்பராக இருந்ததாகவும், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” எனவும் தெரிவித்திருந்தார். 

இதனைக் கண்ட இணையவாசிகள் பிரதீப் மீது அதிருப்தியடைந்து சரமாரியாக கருத்துகளை பதிவிட தொடங்கினர். ஒருவர், படத்தை பார்த்து பாராட்டி கருத்துப்போடுவது பாராட்டுக்குரிய  விஷயம் தான். ஆனால் சமூகவலைத்தளத்தில் வெற்றிமாறனின் பெயரை குறிப்பிடும் போது தயவு செய்து வெற்றிமாறன் சார் என்று குறிப்பிடுங்கள்.  இது எனது வேண்டுகோள் என தெரிவித்திருந்தார். 

இதேபோல் இன்னொரு இணையவாசி, ஒரு படம் நல்லா போனா போதுமே மரியாதை கிடையாதா எனவும், வெற்றிமாறனை சார் என சொன்னால் குறைந்து விடுவீர்களோ என சரமாரியாக விமர்சிக்க தொடங்கினர். அதேசமயம் பிரதீப் ரங்கநாதனுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிட்டதால் அவரது ட்விட்டர் பக்கம் கருத்து மோதலால் நிரம்பி வழிந்தது.  

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக “லவ் டுடே” படத்தை இயக்கி அப்படம் மூலம் ஹீரோவாக பரிணாமித்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget