Jagame Thandhiram | தனுஷ் எழுதி பாடியுள்ள 'நேத்து' பாடல் வெளியீடு
நடிகர் தனுஷ் எழுதிப் பாட, இந்த பாடலுக்கும் படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
'நேத்து, ஓர கண்ணில் நான் உன்ன பாத்தேன்.. நேத்து, ஜட செஞ்சு நீ என்ன பாத்த..' என்ற வரிகளோடு லண்டன் நகரின் அழகிய தெருக்களில் உருவாக்கப்பட்ட நேத்து என்ற வீடியோ பாடல் ஒன்று ஜகமே தந்திரம் படத்திலிருந்து வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் பாடலுக்கு வரிகளை எழுதி அவரது குரலில் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இந்த படத்தை இயக்க YNOT ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
We can't wait to Spread some Love ❤️
— karthik subbaraj (@karthiksubbaraj) May 22, 2021
Here is #Nethu from #JagameThandhiram
Enjoy the #SuruliLovessu https://t.co/ZbPqM0TrEI@dhanushkraja @Music_Santhosh @AishwaryaLeksh4 @sash041075 @kshreyaas @vivekharshan @sherif_choreo @kunal_rajan @NetflixIndia @SonyMusicSouth @chakdyn
2016ம் ஆண்டு இந்த படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் தேனாண்டாள் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்து நிலையில் சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் இந்த படம் கடந்த 2019ம் ஆண்டு YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று 2019 டிசம்பர் வாக்கில் படப்பிடிப்பு முடிவடைந்தது.
அதன் பிறகு 2020ம் ஆண்டு மே மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் OTT தளத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக அப்போது கூறப்பட்டது. இறுதியில் தற்போது நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை OTT தளத்தில் வெளியிடவுள்ளது.
வருகிற ஜூன் 18-ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது என்ற அதிகாரபூர்வ தகவலை ஒய் நாட் ஸ்டுடியோ (y not studio ) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஓடிடியில் வெளியாகும் தமிழ்ப்படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இறுதியில் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி என்ற பாடல் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. கட்டாயம் திரையரங்குகளில் தான் ஜகமே தந்திரம் வெளியாகும் என்றும் ரசிகர்களும் படக்குழுவும் மிகவும் ஆர்வமாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த படம் வரும் ஜூன் மாதம் OTT தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.