மேலும் அறிய

Netflix : இனி நெட்ஃபிளிக்ஸிலும் விளம்பரங்கள்..! நவம்பர் 3 முதல் Basic with Ads முறை...!

ஒரு மணி நேரத்திற்கு 4 முதல் 5 நிமிடங்கள் வரையில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் .நெட்ஃபிளிக்ஸ் தற்போது விளம்பரங்கள் இல்லாமல் திரைப்படங்கள், வெப் சீரிஸ் , ஆவணப்படங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது.

ஆனால், வருகிற நவம்பர் 3ம் தேதி முதல்  "Basic with Ads" என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த பத்தாண்களில் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்துள்ளதால் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிற்கு 25 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களை பெறும் நிறுவனம், வரலாறு காணாத அளவிற்கு வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதனை சரி செய்ய நெட்ஃபிளிக்ஸ் பல மாறுதல்களை சமீப காலமாக மேற்க்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் “"Basic with Ads"

Netflix : இனி நெட்ஃபிளிக்ஸிலும் விளம்பரங்கள்..! நவம்பர் 3 முதல் Basic with Ads முறை...!
அது என்ன "Basic with Ads" ?

இந்த புதிய Basic with Ads திட்டம் ஆனது, ஏற்கனவே அணுக கிடைக்கும் Basic திட்டத்தை போலவே 720p/HD வரையிலான வீடியோ தரத்தை வழங்கும். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை விளம்பரங்களை வழங்கும். இந்த விளம்பரங்கள்  ஒருமுறை ஒளிபரப்பாகும் பொழுது 15 முதல் 30 வினாடிகள் வரையில் நீளும் என்பதை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக ஆஸ்திரேலியா, பிரேசில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி முதல் இந்த புதிய சந்தா வசதி அறிமுகமாகவுள்ளது. Netflix தலைமை இயக்க அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் கூறுகையில்  புதிய "பேசிக் வித் ஆட்ஸ்" சந்தாக்கள் அமெரிக்காவில் $6.99 செலவாகும், இது விளம்பரங்கள் இல்லாத அடிப்படை விருப்பத்தை விட மூன்று டாலர்கள் குறைவாக இருக்கும் என்றார்.

மேலும் பேசிய அவர் “ நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு 4 முதல் 5 நிமிடங்கள் வரையில்தான் விளம்பரங்களை பதிவேற்றவுள்ளோம். அதற்கு மேலாக  விளம்பரங்களை காட்சிப்படுத்தும் எண்ணம் இல்லை. மேலும் இந்த விளம்பரங்களை முடிந்த அளவு ரிப்பீட்டடாக இல்லாமல் பார்த்துக்கொள்வோம் என்றார்.

View this post on Instagram
 
A post shared by No more mutants (@j.garcatuti)

நெட்ஃபிளிக்ஸ் தனது ஸ்ட்ரீமிங் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து விளம்பரங்கள் ஒளிப்பரப்பு செய்வதை தவிர்த்து வந்தது. இருப்பினும் தற்போது பயனாளர்கள் இழப்பு , சந்தைப்போட்டி , நுகர்வோர் பணவீக்க அதிகரிப்பு உள்ளிட்ட சவால்களால் நெட்ஃபிளிக்ஸ் தற்போது இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த பேசிக் வித் ஆட்ஸ் சந்தாவின் கீழ் பயனாளர்கள் குறைவான படங்களையும் சீரிஸ்களையும் மட்டுமே பார்க்க முடியும் என்றும் , அதனை பதிவிறக்கம் செய்யும் வசதிககளும் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

இதே போல Netflix இன் போட்டியாளரான டிஸ்னி, அதன் சொந்த விளம்பர ஆதரவு சந்தாவை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget