Neeya Naana: ‛அந்த ஒரு வார்த்தைக்கு தான் கல்யாணம் பண்ணேன்...’ நீயா நானா தந்தையின் நெகிழ்ச்சி பேட்டி!
நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்று வைரலான தந்தை சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்!
நீயா நானாவின் சிறந்த தந்தை:
பிக் பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் தொலைக்காட்சி. அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான “நீயா நானா”. சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராயும் நிகழ்ச்சிதான் நீயா நானா. இந்நிகழ்ச்சிக்கு முகம் கோபிநாத், கோபிநாத்திர்கு முகம் நீயா நானா நிகழ்ச்சி என்ற கருத்து மக்களிடையே பல நாட்களாக நிலவி வருகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டுவிட்டது. இதில் பங்கேற்பவர்கள் சிலர் அவ்வப்போது தங்கள் கருத்துகளை பேசி பிரபலமாவதுண்டு. அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவரும் வைரலானார். அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் குறித்த நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற ஒருவர் தனது கணவனை பார்த்து “அவருக்கு சோஷியல் சைன்ஸ்-னா என்னனு ஒருத்தங்க எக்ஸ்ப்ளென் பன்னனும் சார்..ஏ பி சி டி-யே ஒரு மணி நேரம் ஆனாலும் பார்த்துக்கிட்டு இருப்பாரு” என அவரது கணவர் குறித்து நக்கலாக சிரித்துக் கொண்டே கமெண்ட் அடித்தார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் “இப்படியும் ஒருவரால் பேச முடியுமா..” என்பது போல அந்த பெண்மணியை பார்த்தனர். உடனே நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபி நாத், “நான் நிகழ்ச்சியின் இறுதியில் பரிசு கொடுப்பதுதான் வழக்கம், ஆனால் இப்போதே இவருக்கு ‘சிறந்த தந்தைக்கான பரிசினை’ வழங்குகிறேன்” என்று கூறி, அந்த நபருக்கு சிறந்த தந்தைக்கான பரிசையும் வழங்கினார். இதனை தனது மகளுடன் சேர்ந்து பெற்றுக்கொண்ட அவரின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. அவரது மகளோ, “என்னோட அப்பா எப்போதும் தோற்றது கிடையாது” என்று அந்த மகிழ்ச்சியை அப்படியே இரட்டிப்பானது. அதற்கு பிறகு, கணவனை கேமரா முன் கிண்டலடித்த மனைவியை இணையத்தில் அனைவரும் வசை பாட ஆரம்பித்தனர். சும்மா இல்லாத யூடியூப் சேனல்களும், கன்டன்டிற்காக அவர்களை நேர்காணல் எடுக்க ஆரம்பித்தது.
View this post on Instagram
"கதாநாயகன் மாறி ஆயிடுச்சு"
நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தந்தையின் நேர்காணர்களும் தற்போது வைலாகி வருகிறது. அப்படியொரு சேனலுக்கு அவர கொடுத்துள்ள பேட்டியில், “நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு, கதாநாயகன் போல பிரபலமாகிவிட்டேன்” என்று கூறியுள்ளார். பேட்டி எடுக்கும் தொகுப்பாளர் “உண்மையில் உங்கள் மனைவி எப்படி?” என்று கேள்வியெழுப்ப, அவரை முந்தி பதில் சொல்கிறார் அவரது மனைவி. “கேஷ்வலா எப்போதும் போல ஜோக் பன்றதுதான், அன்னிக்கு கேமரா முன்னாடி பன்னதுனாள அது கொஞ்சம் பெரிசாகிடிச்சு” என்று அசால்ட்டாக பதில் சொல்கிறார் அவர். மேலும், “நீ நல்லா படிச்சிருக்க ஏன் இவர கல்லயாணம் பன்னிக்கிட்ட என்ற யாராவது கேட்டால், இது லவ் மேரேஜ் என்று எனக்கு முன் என் கணவர் கூறி விடுவார்” எனவும் பெருமிதம் கூறுகிறார். “நீங்கள் ஏன் இவரை திருமணம் முடித்தீர்கள்?” என அவரது கணவரிடம் கேட்ட போது, “முதன்முறை இவர் வீட்டிற்கு சென்ற போது, இவரது தம்பி எனக்கு வணக்கம் சொல்லி வாங்க மச்சான் என்று கூப்பிட்டார். அதனால்தான், கட்டுனா இந்த வீட்லதான் பொண்ணை கட்டனும்-னு முடிவு செய்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்று கூறுகிறார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள், “கணவரை இப்படி இழிவாக பேசிவிட்டோமே என்ற வருத்தம் இந்த பொண்ணுக்கு இருக்கா இல்லையா?” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.