மேலும் அறிய

Nayanthara Tirupati Visit: காலணி அணிந்து போட்டோஷூட்டா? நயன் - விக்கி திருமலை பயணம்.. திருப்பதியில் நடந்தது என்ன..?

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் திருப்பதி கோயிலில் காலணி அணிந்து போட்டோ ஷூட் நடத்தியதாக தகவல் வெளியானதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி கோயிலில் காலணி அணிந்து போட்டோ ஷூட் நடத்தியதாக தகவல் வெளியானதால் சலசலப்பு ஏற்பட்டது

திருப்பதி தேவஸ்தானம் ஆன்மீகத்தளம் என்பதால், கோயில் வளாகத்தில் போட்டோ ஷூட் நடத்துவதற்கு கோயில் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும். இந்த நிலையில் நேற்று திருமணம் செய்து கொண்ட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இன்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வெளியே வந்த அவர்கள் கோயில் வளாகத்திற்குள் காலணியோடு நின்று  போட்டோ ஷூட் நடத்தியதாக சொல்லப்படுகிறது.  அவர்கள் நின்ற இடம் காலணி அணிய தடை விதிக்கப்பட்ட இடம் என்றும் அவர்கள் விதிகளை மீறி போட்டோ ஷூட் நடத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

முன்னதாக, “இந்திய திரையுலகின் பிரபல நடிகையும், லேடி சூப்பர்ஸ்டாருமானவர் நயன்தாரா. இவர் தன்னுடயை காதலர் விக்னேஷ்சிவனை நேற்று திருமணம் செய்தார். இவர்களது திருமணத்தை முன்னிட்டு ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துகளை சமூகவலைதளங்ளில் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். திருமணம் முடிந்த உடன் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருப்பதி செல்வார்கள் என்று தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில், சற்றுமுன் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருப்பதிக்கு சென்றனர். வால்வோ காரில் தம்பதி இருவரும் சென்னையில் இருந்து நேரடியாக திருப்பதி சென்றனர். நயன்தாராவிற்கும், விக்னேஷ்சிவனுக்கும் திருப்பதி மிகவும் மனதிற்கு நெருக்கமான ஆலயம் ஆகும்.

இவர்கள் இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இவர்கள் காதலித்து வந்தது முதல் அடிக்கடி திருப்பதி ஆலயத்திற்கு சென்று வருகின்றனர். குறிப்பாக, சமீபகாலங்களில் நயன்தாரா – விக்னேஷ்சிவன் ஜோடி அடிக்கடி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, திருமணம் முடிந்த பிறகு முதன்முறையாக இருவரும் புதுமணத்தம்பதிகளாக திருப்பதி வெங்காடசலபதி ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

நயன்தாரா மஞ்சள் நிற புடவையிலும், விக்னேஷ்சிவன் பட்டு வேஷ்டி, பட்டுசட்டையிலும் கோவிலுக்கு வந்தனர். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த நயன்தாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்து மதத்தை தழுவியதாக கூறப்படுகிறது. மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற விக்னேஷ்சிவன் – நயன்தாரா திருமணம்கூட இந்து மத முறைப்படியே நடைபெற்றுள்ளது. நயன்தாரா மஞ்சள்கயிறு சூடிய மாங்கல்யத்தை பார்க்கும் புகைப்படம் நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. முதல்வர் மன்னிப்பு கேட்கணும்.. சீறும் பாஜக, பாமக
புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. முதல்வர் மன்னிப்பு கேட்கணும்.. சீறும் பாஜக, பாமக
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. முதல்வர் மன்னிப்பு கேட்கணும்.. சீறும் பாஜக, பாமக
புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்.. முதல்வர் மன்னிப்பு கேட்கணும்.. சீறும் பாஜக, பாமக
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
”காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – திமுகவிற்கு பாடம் புகட்டுவோம்” கொதித்தெழுந்த ராமதாஸ்..!
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
மாறும் செய்யாறு சிப்காட்.. தரமாக தயாராகும் வண்டலூர் - வந்தவாசி 6 வழிச்சாலை.. நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Gold Silver Price: காலையிலே ஹாப்பி! தங்கம் விலை திடீர் சரிவு - இவ்வளவு கம்மியா?
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 
TN Rains: சென்னையில் காலை முதல் கனமழை! 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
TN Rains: சென்னையில் காலை முதல் கனமழை! 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Breaking News LIVE 7th NOV 2024:  12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Breaking News LIVE 7th NOV 2024: 12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Sai Pallavi - Sivakarthikeyan  : தெலுங்கு ரசிகர்களையும் பிடிச்சிட்டாங்க...தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன், சாய்பல்லவி
தெலுங்கு ரசிகர்களையும் பிடிச்சிட்டாங்க...தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன், சாய்பல்லவி
Embed widget