Nayanthara: வாடகைத்தாய் மூலம் குழந்தை.. நயன்தாராவை சுற்றும் அடுத்த புயல்.!
சமீபத்தில் அந்த ஜோடி சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது நெற்றி உச்சியில் குங்குமம் வைத்திருக்கவே நயன் தாராவுக்கு திருமணம் முடிந்துவிட்டது என செய்திகள் பரவின.
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். பரஸ்பர மரியாதையுடன் காதலித்து வரும் இவர்கள், சினிமாவிலும் ஒன்றிணைந்து படங்களை தயாரிப்பது, படங்களை வாங்கி விநியோகம் செய்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இவைத்தவிர வெளிநாடுகளுக்கு டூர் சென்று ஸ்டில்களை தட்டிவிடும் இந்த ஜோடி, அவ்வப்போது கோயில்களுக்கு செல்வதும் வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் அந்த ஜோடி சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது நெற்றி உச்சியில் குங்குமம் வைத்திருக்கவே நயன் தாராவுக்கு திருமணம் முடிந்துவிட்டது என செய்திகள் பரவின. ஏற்கெனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என நயனே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்த நிலையில் தற்போது ரகசியமாக திருமணமே முடிந்துவிட்டது என தகவல்கள் பரவின. ஆனால் இது தொடர்பாக விக்னேஷ் சிவன் - நயன் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
View this post on Instagram
குழந்தை...
திருமண செய்தி பரவி அடங்குவதற்குள் குழந்தை தொடர்பான செய்தியை தாங்கிக்கொண்டு சுற்றுகிறது கோலிவுட். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இந்த தம்பதி முடிவெடுத்திருப்பதாக பரபர தகவல் சுற்றி வருகிறது. இது தொடர்பாக பாலிவுட் சினிமா இணையதளம் ஒன்று செய்தி வெளியிடவே அது கோலிவுட்டில் பரபரப்பாகிவிட்டது.
View this post on Instagram
நெருக்கமான வட்டாரம்...
இந்த தகவல்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிங்க்வில்லா, திருமணம், குழந்தை என நயன் தாராவை சுற்றும் செய்திகள் அனைத்துமே வெறும் வதந்திதான் எனக் குறிப்பிட்டுள்ளது. வரிசையாக படங்களை வைத்துள்ள நயன் அதில்தான் கவனம் செலுத்தி வருவதாகவும், திருமணம் , குழந்தையெல்லாம் எதுவும் திட்டமில்லை என்றும் பிங்க்வில்லா குறிப்பிட்டுள்ளது. இது குறித்து விக்னேஷ் சிவனின் நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக குறிப்பிட்டுள்ள பிங்க்வில்லா, '' இந்த தகவலையெல்லாம் கேட்கும்போது சிரித்துக்கொள்வோம். ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை திருமண செய்திகள் வெளியாகிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவர்கள் தங்களது பணியில் பிசியாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.