Nayanthara: ”நிறைய பார்த்தாச்சு.. இது வெறும் ஆரம்பம்தான்..” : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அதிரடி..
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஒரே மேடையில் தங்களது கல்யாணம் குறித்து பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஒரே மேடையில் தங்களது கல்யாணம் குறித்து பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கலாட்டா நிறுவனம் நடத்திய கலாட்டா க்ரோவுன் நிகழ்ச்சியில் பிரபல நடிகையான நயன்தாராவும், அவரது காதலரான விக்னேஷ் சிவனும் பங்கேற்றனர். அப்போது விழா மேடையில் ஏறி விருதை வாங்கிய நயனிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி முகத்தில் ஒரு ஸ்பெஷல் கலை வந்திருக்கு.. நான் ஏன் என்று கேட்க மாட்டேன் என்று சொல்ல, கீழே இருந்த விக்னேஷ் சிவன் வெட்கப்பட்டார். அப்படியே நயனுடன் மேடையில் ஏறி இணைந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய நயன், “ நிறைய பார்த்தாச்சு.. இது வெறும் ஆரம்பம் தான்.. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்று பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. 5 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் வருகிற ஜூன் 9 ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
யார் இந்த விக்னேஷ் சிவன்..?
திருச்சி மாவட்டம் லால்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீனாகுமாரி. சென்னை வடபழனி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு விக்னேஷ்வரன் , ஐஸ்வர்யா என இரண்டு குழந்தைகள். இவர்களது பூர்வீகம் லால்குடி என்றாலும், பணிநிமித்தம் காரணமாக, கடந்த 1971ம் ஆண்டே சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.
தற்போது, சிவக்கொழுந்து உயிருடன் இல்லை, தாய் விக்னேஷ்வரனின் தங்கையுடன் வசித்து வருகிறார். விக்னேஸ்வரன் சினிமாத்துறைக்காக விக்னேஸ்வரன் என்ற பெயரை விக்னேஷ் சிவன் என்று வைத்துக்கொண்டார்.
போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து ‘நானும் ரெளடிதான்’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
View this post on Instagram
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்திருந்த இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். விக்னேஷ் அடுத்ததாக அஜித்தின் 62-வது படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.