மேலும் அறிய

Nayanthara: உங்க பேரன்ப மறக்க மாட்டேன்: நயன்தாரா லிஸ்ட்டில் உதயநிதி, ஷாருக்கான்! எதற்கு தெரியுமா

Nayanthara:நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள ஆவணப்படத்திற்கு ’NOC’ வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

’Nayanthara: Beyond The Fairy Tale’ என்ற ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. அதில் காட்சிகளைப் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். 

நயன்தாரா - Beyond The Fairy Tale:

கேரளாவில் பிறந்து தமிழ் மொழிப் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.  தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து நாடு முழுவதும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

நயன்தாரா - Beyond The Fairy Tale என்ற தலைப்பில் அவரது திருமண ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதில், நயன்தாராவின் காதல், தனிப்பட்ட வாழக்கை அனுபவங்கள், திருமண நிகழ்ச்சி விக்னேஷ் சிவனுடனான அவரது வாழ்க்கையைப் பற்றியதாக அமைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம் செய்து கொண்டனர். கோலிவுட்டின் காதல் ஜோடியாக ரசிகர்கள் இவர்களை கொண்டாடி வருகின்றனர். நானும் ரெளடிதான் திரைப்பட ஷீட்டிங்கின் போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலிக்க தொடங்கி, திருமணம் நடந்து உயிர் ருத்ரோநில் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். 

நன்றி:

நயன்தாரா, தனது திருமண ஆவணப் படத்தில் காட்சிகளைப் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,”நமது 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது. அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Nayanthara: உங்க பேரன்ப மறக்க மாட்டேன்: நயன்தாரா லிஸ்ட்டில் உதயநிதி, ஷாருக்கான்! எதற்கு தெரியுமா

ஐசரி கணேஷ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், ராம்குமார் கணேசன், ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ், அய்ங்கரன் இண்டர்நேசனல், கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ், ஏ.ஆர். முருகதாஸ், தமீன் ஃபிலிம்ஸ், ஸ்ரீ சரவணா க்ரியேசன்ஸ், சர்குணம் சினிமாஸ் & நெமிச்சந்த் ஜபாக்கி, ட்ரம்ஸ்டிக்ஸ் புரோடக்சன்ஸ், கேமியோ ஃபில்ம்ஸ், Konidela Production Company, Kamakshi Movies, ஸ்ரீ சாய் பாபா மூவிஸ், ராஷிகா எண்டர்டெயின்மெண்ட், ராப்பகல் மூவி, அம்மு இண்டர்நேசனல் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவங்களின் பெயர்கள், அதன் உரிமையாளர்கள் பெயரைக் குறிப்பிட்டு ‘நம் பயணம் இதேபோல் என்றென்றும் தொடரும். எனத் தெரிவித்துள்ளார். 

விக்னேஷ் சிவன் நடிப்பில் உருவான நானும் ரௌவுடி தான் படத்தில் நயன்தாரா நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்கள், ஏராளமான திரை நட்சத்திரங்கள் முன்னிலையில் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தங்களது திருமண நிகழ்வுகளை ஒளிபரப்பும் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருந்தனர். அதில் நானும் ரௌவுடி தான் திரைப்படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளரிடம் அனுமதி கோரி இருந்தனர். ஆனால், அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி வழங்கவில்லை. மேலும், காட்சிகளை பயன்படுத்தியுள்ளதால்10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதையும் நயன்தாரா அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டிருந்தார். இது பேசுபொருளானது. நயன்தாரா தனுஷ் பெயரை குறிப்பிடாமல் நன்றி தெரிவித்திருப்பது பற்றியும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Manickam Tagore: மதுரை வடக்கு காங்கிரசுக்கே.! திமுகவை அடுத்தடுத்து விடாமல் சீண்டும் மாணிக்கம் தாகூர்-நடந்தது என்ன.?
மதுரை வடக்கு காங்கிரசுக்கே.! திமுகவை அடுத்தடுத்து விடாமல் சீண்டும் மாணிக்கம் தாகூர்-நடந்தது என்ன.?
Vaithilingam joined DMK : வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது ஏன்.? இது தான் முக்கிய காரணம்- மு.க.ஸ்டாலின் சொன்ன ரகசியம்
வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது ஏன்.? இது தான் முக்கிய காரணம்- மு.க.ஸ்டாலின் சொன்ன ரகசியம்
Republic Day Award: தமிழகத்தில் டாப் 3 காவல் நிலையம் எது தெரியுமா.? முதலிடத்தை தட்டி தூக்கியது எந்த ஊர்.?
தமிழகத்தில் டாப் 3 காவல் நிலையம் எது தெரியுமா.? முதலிடத்தை தட்டி தூக்கியது எந்த ஊர்.?
ஆசிரியர்கள் போராட்டத்தில் சதி? தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற என்ன நடக்கிறது? SSTA எச்சரிக்கை!
ஆசிரியர்கள் போராட்டத்தில் சதி? தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற என்ன நடக்கிறது? SSTA எச்சரிக்கை!
ABP Premium

வீடியோ

MK Stalin vs Modi | டபுள் என்ஜின் vs டப்பா என்ஜின்! மோடியை விளாசிய ஸ்டாலின்! கோபமான தமிழிசை
Anbumani Mango symbol | அன்புமணிக்கு மாம்பழம்! சம்பவம் செய்த பாஜக! அப்செட்டில் ராமதாஸ் தரப்பு
”விசில் அடிக்க தெரியாதுபா?” பாவமாக சொன்ன விஜய் வைரலாகும் வீடியோ!
”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manickam Tagore: மதுரை வடக்கு காங்கிரசுக்கே.! திமுகவை அடுத்தடுத்து விடாமல் சீண்டும் மாணிக்கம் தாகூர்-நடந்தது என்ன.?
மதுரை வடக்கு காங்கிரசுக்கே.! திமுகவை அடுத்தடுத்து விடாமல் சீண்டும் மாணிக்கம் தாகூர்-நடந்தது என்ன.?
Vaithilingam joined DMK : வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது ஏன்.? இது தான் முக்கிய காரணம்- மு.க.ஸ்டாலின் சொன்ன ரகசியம்
வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது ஏன்.? இது தான் முக்கிய காரணம்- மு.க.ஸ்டாலின் சொன்ன ரகசியம்
Republic Day Award: தமிழகத்தில் டாப் 3 காவல் நிலையம் எது தெரியுமா.? முதலிடத்தை தட்டி தூக்கியது எந்த ஊர்.?
தமிழகத்தில் டாப் 3 காவல் நிலையம் எது தெரியுமா.? முதலிடத்தை தட்டி தூக்கியது எந்த ஊர்.?
ஆசிரியர்கள் போராட்டத்தில் சதி? தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற என்ன நடக்கிறது? SSTA எச்சரிக்கை!
ஆசிரியர்கள் போராட்டத்தில் சதி? தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற என்ன நடக்கிறது? SSTA எச்சரிக்கை!
Republic Day 2026: டாஸ் மூலம் இந்தியாவிற்கு கிடைத்த பாரம்பரிய சின்னம்..! பாக்., பிரிவினையின் முக்கிய வரலாறு
Republic Day 2026: டாஸ் மூலம் இந்தியாவிற்கு கிடைத்த பாரம்பரிய சின்னம்..! பாக்., பிரிவினையின் முக்கிய வரலாறு
Chennai Power Shutdown: ஜனவரி 27-ம் தேதி சென்னைல எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
ஜனவரி 27-ம் தேதி சென்னைல எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
Marutis Car Market: தனிக்காட்டு ராஜா..! ஆதிக்கம் செலுத்தும் மாருதி - டாடாவை முடித்த மஹிந்த்ரா - கியா நிலவரம்
Marutis Car Market: தனிக்காட்டு ராஜா..! ஆதிக்கம் செலுத்தும் மாருதி - டாடாவை முடித்த மஹிந்த்ரா - கியா நிலவரம்
Car Tax: அடி தூள்..! ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா To BMW, லாம்போகினி - ரூ.25 லட்சம் வரை குறையும்- இந்தியாவின் ஒப்பந்தம்
Car Tax: அடி தூள்..! ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா To BMW, லாம்போகினி - ரூ.25 லட்சம் வரை குறையும்- இந்தியாவின் ஒப்பந்தம்
Embed widget