Nayanthara Vignesh Shivan wedding: பாஸ் வேர்டு… ட்ரெஸ் கோடு… இது இருந்தால்தான் அனுமதி… அதிரடி பாதுகாப்புகளுடன் நயன் - விக்கி திருமணம்!
திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் ஒரு கோட் அனுப்பி வைக்கப்படும். அந்த கோடை காண்பித்தால் தான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு நுழைய முடியுமாம்.
நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண மண்டபத்தை நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் நாளை (9-ந் தேதி) நடக்கிறது. நானும் ரவுடி தான் மூலம் காதல் வயப்பட்ட இருவரும் தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார். திருமணத்திற்கு பிறகு வருகிற ஜூன் 11-ந் தேதி நயன்தாரா உடன் வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.
View this post on Instagram
பாதுகாப்பு ஏற்பாடுகள்
திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், திரைபிரபலங்களை அழைத்துள்ள விக்கி -நயன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இதற்கிடையே விக்னேஷ் சுவன் - நயன்தாரா தம்பதியின் வீடியோ வடிவிலான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபலங்களும், முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்ள இருப்பதால், திருமணம் நடக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
பாஸ்வேர்டு
அதன்படி, அழைப்பிதழ் இருந்தால் மட்டும் இந்த திருமணத்தில் நுழைய முடியாது என கூறப்படுகிறது. மேலும், திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் ஒரு கோட் அனுப்பி வைக்கப்படும். அந்த கோடை காண்பித்தால் தான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு நுழைய முடியுமாம்.
ட்ரெஸ் கோடு
மேலும், திருமணத்திற்கு வருபவர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் தான் உடை அணிய வேண்டுமாம். நாளை திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இன்று மாலை சங்கீத் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன் மற்றும் விக்கி முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்