மேலும் அறிய

Nayanthara: இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்..!

நடிகை நயன்தாரா தனது இரட்டை குழந்தைகள் மற்றும் கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முக்கிய கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா,  கடந்த ஜூன் 9ம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை முக்கிய திரை பிரபலங்கள் சூழ மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் சொகுசு ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். அடுத்த 4 மாதத்தில் நடிகை நயன்தாரா வாடகைத் தாய் முறைப்படி,  இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து அம்மாவானார்.

தொடர்ந்து, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சேர்ந்து, அந்த குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயர் சூட்டியுள்ளனர். திருமணத்திற்கு முன்பு வரை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற நாட்களில், விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார் நயன்தாரா. அதுதொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வந்தன. 

விக்னேஷ் சிவன் வாழ்த்து:

ஆனால், இம்முறை தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் சேர்ந்து நயன்தாரா கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளார். நால்வரும் சேர்து குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

விக்னேஷ் சிவன் இன்ஸ்டா பதிவு:

அந்த பதிவில், உயிர், உலகம், நயன், விக்கி மற்றும் குடும்பத்தினர் சார்பாக அனைவருக்கும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அனைவருக்கும் அனைத்து சந்தோஷங்களுடன், பெருங்கனவுகளையும் கடவுள் நிறைவேற்றி கொடுக்கட்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் விக்னேஷ் சிவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் தனது இரண்டு குழந்தைகளின் புகைப்படத்தையும், சாண்டா கிளாசின் தொப்பி போன்ற ஸ்டிக்கரை கொண்டு விக்னேஷ் சிவன் மறைத்துள்ளார்.

பாலிவுட்டில் அறிமுகமாகும் நயன்தாரா:

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான கனெக்ட் படத்தின் ரிலீஸை முன்னிட்டு பிரத்யேக பேட்டி அளித்த நயன்தாரா தன்னுடைய வாழ்க்கை பற்றி பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார். இதுவரை தென்னிந்தியாவில் லேடி சூப்பர்ஸ்டாராக அசத்தி வந்த நிலையில், அடுத்த ஆண்டு நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகம் ஆக உள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?

Embed widget