Nandhini Yogesh Viral Video : இது டைட்டானிக் 2.0 : நந்தினி- யோகேஷின் துபாய் ட்ரிப்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
நந்தினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர். இதோடு மட்டுமின்றி மைனா விங்ஸ் என்ற யூடியூப் சேனலிலும் ஒவ்வொரு விஷயங்களையும் பதிவிட்டுவருகிறார்.
துபாயில் கப்பலில் ஜாலியாக பயணித்த நந்தினி- யோகேஷின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இதோடு துபாயில் பார்த்த அனைத்து விஷயங்களையும் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்த நந்தினி பிரபலமானதையடுத்து இதுவரை அனைவர் மனதிலும் மைனா நந்தினியாகவே வலம் வருகிறார். சின்னத்திரை சீரியலைத்தொடர்ந்து, விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துக்கொண்டார். இதன் பிறகு தன்னுடைய திறமையின் மூலம் வெள்ளித்திரையிலும் கால்பதித்து சாதனை படைத்துள்ளார். தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கும் இவர், சின்னத்திரையில் மட்டுமில்லாது சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார்.
நந்தினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர். இதோடு மட்டுமின்றி மைனா விங்ஸ் என்ற யூடியூப் சேனலிலும் ஒவ்வொரு விஷயங்களையும் பதிவிட்டுவருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில், மைனா தனது கணவர் யோகியுடன், துபாய் நாட்டுக்கு சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், துபாய் ஏர்போர்டில் இறங்கியதும், ஹோட்டலுக்கு சென்ற மைனாவும், யோகியும் அங்குள்ள ரூமை சுற்றிக்காட்டுகின்றனர். இதில் லிவில் ரூம், பெட்ரூம், சோஃபா, டிவி, டுயல் பாத்ரூம் என வீட்டில் உள்ளது போல அனைத்தும் உள்ளது.
இதனையடுத்து துபாயில் உள்ள சிட்டி சென்டருக்கு சென்ற மைனாவை யோகி, வீடியோ எடுக்கும் ஆரம்பிக்கும் போது, அங்கு சர்ப்ரைஸாக மாகாபா மனைவி சூசன் என்ட்ரி ஆகிறார். எனவே எல்லோரும் ஒன்னாத்தான் போயிருப்பாங்க போல என ரசிகர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். பின்னர் துபாயில் எலக்ட்ரானிக் ஷாப்க்கு சென்று தனது யூடியூப் சேனலுக்கு தேவையானப் பொருட்களை வாங்குகின்றனர்.
தங்களுக்குத் தேவையாக அனைத்துப் பொருள்களையும் வாங்கிய நந்தினி – யோகேஷ், டின்னருக்காக கப்பலில் டின்னர் சாப்பிட போறாங்க. அப்போது நான் முதல் தடவையா கப்பல்ல போறேன் என்றும், அந்த கப்பல் எப்படியிருக்கு.. என்னவெல்லாம் இருக்கு அப்படின்றத தான் பார்க்கப்போறாம் என சொல்லி ஆரம்பித்ததும், கார் டிராஃபிக்கில் சிக்கிக்கொள்கிறது.
இதன் பின்னர் இருவரும் பொடி நடையாக நடைந்து கப்பலுக்கு போய்விடுகிறார்கள். போகும்போதே ”நீ ஜாக் ஆ மாறிடற, நான் ரோஸா மாறிவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே கப்பலுக்குள் சென்ற இவர்கள், தாங்கள் ரிசர்வ் பண்ணிய டேபிளில் அமர்ந்தபடி ஜாலியாக என்ஜாய் செய்கின்றனர்.
இங்கு இருவரும் இரவில் மிளிரும் வானுயர்ந்த துபாயின் கட்டிடங்களை வீடியோவில் காட்டி மகிழ்கின்றனர். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.