Seeman: ”இது என்னோட டயலாக்” .. பிரகாஷ்ராஜ் சொன்ன “செல்லம்” வார்த்தைக்கு உரிமை கொண்டாடிய சீமான்..!
நடிகர் பிரகாஷ்ராஜ் கில்லி படத்தில் பேசிய “செல்லம்” என்கிற வசனம் நான் சொன்னதுதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் பிரகாஷ்ராஜ் கில்லி படத்தில் பேசிய “செல்லம்” என்கிற வசனம் நான் சொன்னது தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சீமானும் சினிமாவும்
என்னதான் அரசியலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்தாலும், சினிமாவில் அவருடைய படங்களுக்கு என்று தனி ரசிகர்களே உள்ளனர். இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘பாஞ்சாலங்குறிச்சி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். அதேசமயம் நடிப்பிலும் சீமான், ஆடும் கூத்து, பொறி, பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தார், மகிழ்ச்சி, தவன், முந்திரிக்காடு உள்ளிட்ட சில படங்களில் ரசிகர்களை கவர்ந்தார்.
நான் சொன்ன “அந்த வார்த்தை”
தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் அவர், அவ்வப்போது தனது பேட்டிகளில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேசுவது. அந்த வகையில் நேற்று கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது பேசிய அவர், “முதல்முதலாக சினிமாவில் செல்லம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது நான் தான். பாஞ்சாலங்குறிச்சி ஷூட்டிங்கில் வடிவேலுவை பார்த்து ”செல்லம் இங்க வாடி” என அழைப்பேன். அப்படி தான் நாங்கள் பேசிக்கொள்வோம். அது அப்படியே பரவி பரவி கில்லி படத்துல பிரகாஷ்ராஜ் ”செல்லம்...” என வச்சிட்டாங்க. அந்த பிட்டு என்னோட பிட்டு தான்” என சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’சூழ்ச்சி செய்கிறார்கள், திரிக்கிறார்கள், மாற்றுகிறார்கள்..’ சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதி விளக்கம்!
பிரகாஷ்ராஜின் ட்ரேட் மார்க்
கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘கில்லி’ . தரணி இயக்கிய இந்த படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த இப்படம் பிரகாஷ்ராஜின் வில்லத்தனமான நடிப்புக்கும், விஜய்யின் ஆக்ஷன் கேரியருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் த்ரிஷாவை காதல் தொல்லை செய்யும் பிரகாஷ்ராஜ், அவரை காணும் போதெல்லாம் “செல்லம்..ஐ லவ் யூ” என சொல்வார். இந்த டயலாக் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. நடிகர் பிரகாஷ்ராஜின் ட்ரேட் மார்க் வசனமாகவும் மாறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 21 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இசையமைக்க வரும் “டி.ராஜேந்தர்” .. என்ன காரணம் தெரியுமா?